search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமைச்சர் பொன்முடி ஆய்வு
    X

    பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி குறைகளை கேட்டறிந்தார். அருகில் புகழேந்தி எம்.எல்.ஏ., உள்ளார்.

    திருவெண்ணைநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமைச்சர் பொன்முடி ஆய்வு

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விடுபட்ட பயனாளிகள் பயன் தரும் வகையில் காப்பீடுதிட்ட அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமினை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தார். அவர் பேசியதாவது,விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமினை பயன்படுத்தி மக்கள் பயன்பெற வேண்டும் என கூறினார்.

    முகாமில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்றம் துணைத் தலைவர் ஜோதி, வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சுலைமான், நகர துணை செயலாளர் தில்லை.காமராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவ காப்பீடு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×