search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gingee weekly market"

    • வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது.
    • சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்வதால், இவைகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது. அதிகாலை 3 மணி முதலே செஞ்சி விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர்.

    ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. இதனை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன. #GingeeWeeklyMarket
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் விளை பொருட்கள் விற்பனைக்கு வருவதுடன், ஆடு, மாடு விற்பனையும் அமோகமாக நடைபெறும்.

    தீபாவளி பண்டிகையையொட்டி செஞ்சியில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலையிலேயே வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிய தொடங்கினர்.

    சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை, வேப்பூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். செஞ்சிப்பிபகுதி மட்டுமின்றி இப்பகுதியை ஒட்டியுள்ள கீழ்பெண்ணாத்தூர், சேத்பட், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு ஆட்டின் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை விலை போனது. இது வழக்கத்தைவிட கூடுதலாகும். இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன.
    ×