search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி வாரசந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள்.
    X
    செஞ்சி வாரசந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள்.

    தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன. #GingeeWeeklyMarket
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் விளை பொருட்கள் விற்பனைக்கு வருவதுடன், ஆடு, மாடு விற்பனையும் அமோகமாக நடைபெறும்.

    தீபாவளி பண்டிகையையொட்டி செஞ்சியில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலையிலேயே வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிய தொடங்கினர்.

    சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை, வேப்பூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். செஞ்சிப்பிபகுதி மட்டுமின்றி இப்பகுதியை ஒட்டியுள்ள கீழ்பெண்ணாத்தூர், சேத்பட், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு ஆட்டின் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை விலை போனது. இது வழக்கத்தைவிட கூடுதலாகும். இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன.
    Next Story
    ×