முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் சி.வி. சண்முகம் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் சி.வி. சண்முகம் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார்மங்கலம் மற்றும் வானூர் அடுத்த கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com