மரக்காணம் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார்.அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மரக்காணம் அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 42) இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டு களாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு விவசாய நிலத்துக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிறு வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பின்பு அங்கிருந்து புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கிருந்து மேல் சிகிசசைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று இரவு இறந்துபோனார். இது குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com