என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்த வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
  X

  அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

  அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்த வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம்.
  • பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பை முக்கியமாக கருதுகிறோம்.

  சென்னை:

  ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  வழக்கு விசாரணையின்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களுடன் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

  ராயப்பேட்டை பகுதி வன்முறை தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கைது செய்ய நடவடிக்க எடுக்கப்படுகிறது என நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். மேலும் 15 பேர் கைது தொடர்பான ரிமாண்ட் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், இருதரப்பு வாதங்களும் நடைபெற்றன.

  இதற்கிடையே, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

  இந்நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இன்று மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

  Next Story
  ×