என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளோடு 40 அடி பள்ளத்தில் விழுந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    குடியாத்தம்:

    பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூ நகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றனர்.

    குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.

    அப்போது நிலைதடுமாறி சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார்சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப முயன்றனர்.

    அதற்குள் படுகாயம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்‌ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபரை தாக்கியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் மோனிஷ்குமார் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மோனிஷ்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேகநாதனுக்கும் மோனிஷ்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற மேகநாதன் தனது உறவினர்களுடன் மோனிஷ்குமார் வீட்டிற்குள் புகுந்து சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் மோனிஷ்குமார் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து மோனிஷ்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மேகநாதன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, யுகேஷ், கிஷோர், சசிகலா, உமா, தனலட்சுமி, சரஸ்வதி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வாணியம்பாடி அருகே இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு மாணவனின் தந்தையை தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் கூட்டுபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரத்குமார் (19). திருப்பத்தூரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவரது உறவினர் விஜயகாந்த் (19). இவரது சகோதரியிடம் சரத்குமார் அடிக்கடி பேசியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா (19), ஆசைத்தம்பி (23), சந்தோஷ் என்கிற பெருமாள் சாமி (26) ஆகியோர் சரத்குமாரை தாக்கினர்.

    இதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

    தந்தை தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல் சரத்குமார் மனமுடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இன்று காலை இறந்தார்.

    திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஆற்காடு அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கலவை:

    ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

    தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.

    லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.

    லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூரை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் சந்தோஷ் (வயது 20). ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார். குறவன் காலனியை சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). இவர் பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை 2 பேரும் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கரூரில் இருந்து அரக்கோணத்திற்கு டீசல் ஏற்றி சென்ற லாரி ஆம்பூர் அடுத்த உடையராஜ்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது.

    லாரி டிரைவர் ஊத்தங்கரை அடுத்த பெரிய கள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் (38) லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் வந்த பைக் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் இறந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சந்துரு இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஜாக்டோ-ஜியோ மாநில நிதி காப்பாளர் சேகர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    காட்பாடியில் மாநில தலைமை குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் அஜிஸ்குமார், குப்புராமன், ஆண்டாள், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செல்வகுமார், பாபு, ஆறுமுகம், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்க பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன.

    திருவண்ணாமலையில் ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அண்ணா சிலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்,

    இதே போல் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
    அரக்கோணம் அருகே சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்த மாணவிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த நெமிலி துறையூர் மோட்டூரை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் தனலட்சுமி (வயது19). வாலாஜாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்து உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் தனலட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சிலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தனலட்சுமியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo

    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்கபள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன. #JactoGeo

    தமிழகத்தில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். #elangovan #dmk #congress #parliamentelection

    ஆம்பூர்:

    வாணியம்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முயற்சி எடுத்து இருக்கின்றனர். முயற்சியின் பலனாக கொல்கத்தாவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

    அதில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பேசியிருக்கின்றனர். இது நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் இது ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது. தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவார். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க அதிகாரத்தையும், பணபலத்தையும் உபயோகப்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி கலையாது.


    தமிழகத்தில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #dmk #congress #parliamentelection

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

    2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். #caraccident

    ஆம்பூர்:

    பேர்ணாம்பட்டு மளிகை தெருவை சேர்ந்தவர் முகமதுசபான் (வயது22). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் முகமது இம்ரான் (22). உசேன் (21). முசமில் (22). சல்மான் (22). துபால் (21). மற்றொரு சல்மான் (21). ஆகியோருடன் நேற்று மாலை குடியாத்தம் மேல்ஆலத்தூரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு காரில் சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஏலகிரி மலைக்கு சென்றனர். அங்கிருந்து நள்ளிரவு வீட்டிற்கு காரில் திரும்பினர். ஆம்பூர் அருகே அய்தம்பட்டு சின்னவரிக்கம் கூட்ரோடு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே முகமதுசபான், முகமது இம்ரான், உசேன் ஆகிய 3 பேர் பலியாகினர். இறந்த 3 பேரும் கல்லூரி மாணவர்கள்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழிலேயே முசமில் உயிரிழந்தார். துபால், சல்மான் மற்றொரு சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  #caraccident

    ×