என் மலர்

    செய்திகள்

    ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதல் - மாணவர்கள் 2 பேர் பலி
    X

    ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதல் - மாணவர்கள் 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூரை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் சந்தோஷ் (வயது 20). ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார். குறவன் காலனியை சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). இவர் பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை 2 பேரும் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கரூரில் இருந்து அரக்கோணத்திற்கு டீசல் ஏற்றி சென்ற லாரி ஆம்பூர் அடுத்த உடையராஜ்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது.

    லாரி டிரைவர் ஊத்தங்கரை அடுத்த பெரிய கள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் (38) லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் வந்த பைக் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் இறந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சந்துரு இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×