search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடிச்சம்பாடியில், விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    கடிச்சம்பாடியில், விவசாயிகளுக்கு பயிற்சி

    • தக்கை பூண்டு, கொழிஞ்சி ஆகிய பயிர்களை சாகுபடி செய்வது குறித்து பேசினார்.
    • அமிர்த கரைசலை பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அடுத்த கடிச்சம்பாடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய பயிற்சி ஊராட்சி துணை தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி அனைவரையும் வரவேற்றார்.இதில் தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் கலந்துகொண்டு பேசுகையில்:-

    பாரம்பரிய நெல் ரகங்கள் அதன் குணாதிசயங்கள் சாகுபடி முறைகள் பற்றியும், மூலிகை பூச்சி விரட்டிகள் பஞ்சகவ்யா, மீன் அமிலம், அமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றும், அறுவடைக்கு பின் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக விலை பெறலாம் என்று பேசினார்.

    தொடர்ந்து, துணை வேளாண் அலுவலர் சாரதி பேசுகையில்:- இயற்கை வேளாண்மையில் அதிக மகசூல் பெற பசுந்தால் உர பயிர்கள் சணப்பு, தக்கை பூண்டு, கொழிஞ்சி ஆகிய பயிர்களை சாகுபடி செய்வது குறித்தும், அதனால் மண்வளம் மேம்படுவது குறித்தும் பேசினார். மேலும், இயற்கை முறையில் சாகுபடி செய்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்றார்.

    முடிவில் கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக் ராஜ் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன், மணவாளன், தனசேகரன் மற்றும் இளமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×