search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் உரிமையாளர்கள் போராட்டம்
    X

    டிராக்டர் உரிமையாளர்கள் போராட்டம்

    • இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சுரங்கவியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகைய்யன் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-ம் தேதி முதல் 1 யூனிட் ரூ.2200-க்கு டிராக்டரில் மணல் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்ற போது 1 யூனிட்டிற்கு ரூ.3500 வழங்க வேண்டும் என சுரங்கவியல் துறை அதிகாரிகள் மணல் வழங்க மறுத்தனர்.

    இதனை தொடர்ந்து, கிராம மக்கள் கோவிந்தநா ட்டுச்சேரி, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை 20-க்கும் மேற்பட்ட டிராக்டரை கொண்டு மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் உதவி இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    Next Story
    ×