என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் வேகமாக குறையும் குளங்களின் நீர்மட்டம்
  X

  கோப்புபடம்.

  தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் வேகமாக குறையும் குளங்களின் நீர்மட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.
  • தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

  உடுமலை :

  உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் வாயிலாக நேரடியாக 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையில் இருந்து தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

  இந்தாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் குளங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.அவ்வகையில் 6 குளங்களில், மொத்த நீர் இருப்பில் 50 சதவீதத்தை விட குறைந்துள்ளது. ஒரு குளத்தில் மட்டும் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.செங்குளம் 74.84 ஏக்கர், நீர்மட்ட உயரம் 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும்.

  தற்போதைய நிலவரப்படி 3.20 அடி நீர்மட்டம், மட்டுமே உள்ளது. மொத்தமுள்ள கொள்ளளவில் 22 சதவீத நீர் இருப்பே தற்போது உள்ளது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும்.

  குளத்தில் 53.86 சதவீத நீர்இருப்பு உள்ளது.பெரியகுளத்தில் 37.13 சதவீதம், செட்டிக்குளம் 34.55, கரிசல் குளம் 16.78, தினைக்குளம் 36.79, வளையபாளையம் குளத்தில் 48.39 சதவீத நீர் இருப்பே உள்ளது. 6 குளங்களில், 50 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

  தென்மேற்கு பருவமழை காலத்தில் குளங்களுக்கு குறைந்தளவே நீர்வரத்து இருக்கும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்மட்டம் வேகமாக குறைந்து விட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன காலம் துவங்கும் முன் குளங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் குளங்களுக்கான வரத்து கால்வாய்களை தூர்வாரி நீர் திருட்டை தடுக்க வேண்டும். மேலும், குளங்களின் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்புகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

  உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சீசன், ஜூன் மாதத்தில் துவங்குவது வழக்கம். இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையால், மானாவாரி சாகுபடிக்கான விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர்.ஆனால் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காமல் வறண்ட வானிலை நிலவியது. இதனால் மானாவாரி சாகுபடியில் பயிர்கள் பாதித்தது. பருவமழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. மழையின் தாக்கத்தால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடையவில்லை.அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், விரைவில் மழை தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

  Next Story
  ×