search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்
    X

    திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதியதை படத்தில் காணலாம். 

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்

    • 32 ஆயிரத்து171 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
    • அறை கண்காணிப்பாளராக 1780 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்க ல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 106 மையங்க ளில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பா ளர்களாக 106 தலைமை ஆசிரியர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக 1780 ஆசிரியர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×