என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓட்டப்பிடாரம் அருகே சமையல் செய்த போது தீ பிடித்து இளம்பெண் உடல் கருகி பலி
  X

  ஓட்டப்பிடாரம் அருகே சமையல் செய்த போது தீ பிடித்து இளம்பெண் உடல் கருகி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 18-ந் தேதி கவுதமி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது.
  • திருமணமாகி 3 ஆண்டுகளில் கவுதமி உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

  ஓட்டப்பிடாரம்:

  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சந்திரகிரி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவரது மனைவி கவுதமி(25).இந்த தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஒரு குழந்தை உள்ளது.

  கடந்த 18-ந் தேதி கவுதமி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது.இதனால் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

  இந்த சம்பவம் குறித்து ஓட்டப் பிடாரம் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகளில் கவுதமி உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

  Next Story
  ×