search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது-கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
    X

    முகாமில் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய போது எடுத்த படம். 

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது-கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

    • 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம், சக்கமாள் புரம், அருங்குளம், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இலவச வீட்டுமனை பட்டா

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ., கலெக்டர் லட்சுமி பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு 58 பயனாளி களுக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இறப்பு நிவாரணம், உழவர் பாது காப்பு திட்ட உறுப்பினர் பதிவு, விவசாய இடு பொருட்கள் உள்ளிட்ட வைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை கடந்த சில வாரங்களாக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

    100 நாள் வேலை திட்டம்

    100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பதிவேற்றத்தின் போது சிறு சிறு பிழைகள் ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் விண்ணப் பங்கள் கள ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன. விரை வில் தகுதி உள்ளவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவரது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விளாத்தி குளம் தாசில்தார் ராம கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், வேளாண்மை துணை இயக்குனர் கீதா, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ், கிழக்கு ஒன்றிய செய லாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, கோவில் பட்டி கிழக்கு ஒன்றிய செய லாளர் நவநீத கண்ணன், மாவட்ட கவுன்சிலர் நட ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் பாண்டியராஜன், மார்த்தாண்டம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்துக் கரும்புலி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கரண்குமார் மற்றும் கிளை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகி கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×