search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்- வழக்கம் போல் ஓடத்தொடங்கின
    X

    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்- வழக்கம் போல் ஓடத்தொடங்கின

    • அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.
    • லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    திருவொற்றியூர்:

    டிரைலர் உரிமையாளர்கள், மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என மொத்தம் 37 சங்கங்கத்தினர் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்க்கிங் யார்டு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதையொட்டி அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே டிரைலர் லாரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த காளி, ஆசைத்தம்பி ஆகியோர் டிரைவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போராட்டம் அறிவித்திருப்பதால் வெளியூர் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பண்டிகை காலம் முடிந்த பின் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் பல்வேறு தரப்பிலும் தீபாவளியையொட்டி போராட்டம் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்ததால் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக டிரைலர் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.எம். கோபி தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் டிரைலர் லாரிகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின.

    Next Story
    ×