search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 வயதான குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் தீவிர முயற்சி
    X

    காேப்புபடம்

    5 வயதான குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் தீவிர முயற்சி

    • தனியார் பள்ளியில் சேர்ந்தாலும் அந்த விபரம் சேகரம் செய்யப்படுகிறது.
    • அங்கன்வாடிகளில் படித்து உரிய வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில், 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இது தவிர பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில், அனைத்து 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி த்தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

    ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 'அப்டேட்' செய்யப்படும் தொடக்க கல்வி பதிவேட்டில், 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள், அங்கன்வாடிகளில் படித்து உரிய வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.அதன்பேரில்மாணவர்களை பள்ளியில் சேர்த்து வருகின்றனர். எவரேனும், தனியார் பள்ளியில் சேர்ந்தாலும் அந்த விபரம் சேகரம் செய்யப்படுகிறது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளதால் பலர் நேரடியாக பள்ளிக்கு வந்து விசாரிக்கின்றனர். அவர்களின் பெயர், விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×