search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைநிலங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.

    விளைநிலங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    • நஞ்சை இடங்களை ஆக்கிரமித்து கட்டிட கழிவுகளை கொட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பர்கிட் மாநகரில் நூலக கட்டிட இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். அதனால் நூலகம் செயல்படாமல் இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கிராம மக்கள் மனு

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீயிடம் கொடுத்து சென்றனர்.

    பாளை வெள்ளக்கோவில் கிராமத்தில் வசித்து வரும் வேதாந்தம், ஆசைத்தம்பி, மரியதாஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்து கலெக்டர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எங்கள் பகுதியில் ஏராள மான விளைநிலங்கள் உள்ளன. இவை பாளையங் கால்வாய் மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது.

    தற்போது நஞ்சை நிலமாக உள்ள இந்த இடத்தில் சிலர் கட்டிட ஆக்கிரமிப்புகளை கொண்டு வந்து கொட்டி அவற்றில் கட்டிடங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.

    இது தொடர்பாக நாங்கள் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாளை போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.

    எனினும் அந்த நஞ்சை இடங்களை ஆக்கிரமித்து கட்டிட கழிவுகளை கொட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    எஸ்.டி.பி.ஐ. மனு

    எஸ்.டி.பி.ஐ. மருத்துவர் அணி பர்கிட் யாசின் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப் பட்டது. அதில், பர்கிட் மாநகரில் நூலக கட்டிட இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். அதனால் நூலகம் செயல்படாமல் இருக்கிறது. அதை மீட்டு மீண்டும் அங்கு நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது பாளைப்பகுதி துணை தலைவர் அரசு மீரான், நிர்வாகிகள் ஆசாத், சந்தை மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×