search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோத குடிநீர் விற்பனையை தடுக்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் - பாரதீய ஜனதா கட்சி அறிவிப்பு
    X

    சட்டவிரோத குடிநீர் விற்பனையை தடுக்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் - பாரதீய ஜனதா கட்சி அறிவிப்பு

    • கடந்த 2 மாதமாக இரவு- பகலாக போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது.
    • இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. தென்னை, வாழை தோட்டங்கள் காய்ந்து வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி.எஸ். சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆழ்துளை கிணறு

    ஏரல் முதல் உமரிக்காடு வரை முழுமையான விவசாய பகுதியாகும் இங்கு வயலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இதனை தடுக்க கோரி பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் தொடர்ந்து சட்ட விரோதமாக குடிநீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதே போன்று முன்பு வறட்சி ஏற்பட்டபோது அப்போதைய மாவட்ட கலெக்டர் இந்த பகுதியில் போர்வெல் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளார்.

    தற்போது இந்த பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 2 மாதமாக இரவு- பகலாக போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு லாரி கள் மூலம் விற்பனை செய்யப்படுவது நடந்து வருகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. தென்னை, வாழை தோட்டங்கள் காய்ந்து வருகின்றன.

    கடந்த காலங்களில் இல்லாத அளவில் உமரிக்காடு ஆலடியூர் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சட்டவிரோதமாக போர்வல் அமைத்து லாரிகள் மூலம் நடைபெறும் குடிநீர் திருட்டை தடுத்த நிறுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குடிநீர் திருட்டு நடைபெற்றால் சுற்று வட்டார பொதுமக்கள், விவசாயிகளை ஒன்றிணைந்து லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×