search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும்: மலேசியா மனிதவள அமைச்சர் தகவல்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு, மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத் தலைவர் செய்யது ஜமருல் கான் தலைமையில் பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம். அருகில் நவாஸ்கனி எம்.பி.உள்ளார்.

    மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும்: மலேசியா மனிதவள அமைச்சர் தகவல்

    • மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும் என மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் மலேசியா நாட்டு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு ராமநாதபுரத்தில் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத் தலைவர் செய்யது ஜமருல் கான் தலைமையில் 'ஒரு மாலை பொழுது' என்ற நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடந்தது.

    மலேசிய அமைச்சரை வரவேற்று பாரதி நகர் முதல் பட்டணம் காத்தான் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, தொழிலதிபர்கள், மலேசிய தமிழர்கள், தமிழ் சங்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அமைச்சர் டத்தோ சரவணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சரின் வெற்றி பயணம் குறித்த காணொலி திரையிடபட்டதோடு நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி பேசும்போது,

    தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு உணவகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்கு அனுமதி பெற்று செல்லும் நபர்கள் அங்கு அதே உணவகத்தில் வேறு வேலை செய்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதை தடுத்து அவர்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்ய மலேசிய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    விழாவில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேசும்போது, மலேசியாவிற்கு வேலை தேடி வரும் தமிழக தொழிலாளர்கள் முறையான ஆவண ங்களுடன் வர வேண்டும்.

    வேலை தேடி வரும் அந்நிய தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம் இல்லாமல் தவிப்பதால் தற்போது முறையான தங்குமிடத்தை உறுதி செய்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மின்னனு ஊதிய முறை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மலேசியா மனித வள தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத், மலேசியா கவுன்சில் ஜெனரல் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம், மலேசியா ஒருங்கிணைப்பு குழுவினர், வெளிநாட்டு வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×