search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வு பேரணி-வாகன பிரசாரம்
    X

    பிரசார வாகனத்தை கலெக்டர் லெட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி-வாகன பிரசாரம்

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை சார்ந்த அலுவலர்களால் களநீர் பரிசோதனை செய்முறை விளக்கம் செய்து காட்டப்ப்பட்டது
    • இதனை கலெக்டர் லட்சுமிபதி பார்வையிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரத்தில் வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு வாகன பிரசாரமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை சார்ந்த அலுவலர்களால் களநீர் பரிசோதனை செய்முறை விளக்கம் செய்து காட்டப்ப்பட்டது. இதனை கலெக்டர் லட்சுமிபதி பார்வையிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தினையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்க ளையும் வெளியிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் ஜான் செல்வம், இளநிலை குடிநீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியஜோசப் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×