search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்மீக தலங்கள் நிறைந்த நன்னிலத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஆன்மீக தலங்கள் நிறைந்த நன்னிலத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை

    • நன்னிலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில் உள்ளது.
    • ஒட்டக்கூத்தர் புலவரால் பாடப்பட்டு கட்டப்பட்ட சரஸ்வதி அம்மன் கோயில் நன்னிலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை தலைமை–யிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நன்னிலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாத கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். இங்குள்ள குப்த கங்கை என்னும் திருக்குளம் காசிக்கு இணையான புகழ் பெற்றது.

    அதேபோல் ஒட்டக்கூத்தர் புலவரால் பாடப்பட்ட கட்டப்பட்ட சரஸ்வதி அம்மன் கோயில் நன்னிலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே ஆதிவிநாயகர் என்ற மனித முகம் கொண்ட விநாயகர் அமையப் பெற்றுள்ளது. இதேப்போல் மதுவனேஸ்வரர், சுயம்பு லிங்கம், சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. மேலும் பல இடங்கள் பார்க்ககூடியதாக உள்ளது.

    எனவே நன்னிலம் பகுதியில் உள்ள கோவி–ல்களின் பெருமைகளை வெளிக்கொணரும் வகையில் நன்னிலத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×