search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்ட நந்தியெம்பெருமான்
    X

    சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    திருவையாறில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்ட நந்தியெம்பெருமான்

    • திருவையாறு ஐயாறப்பர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
    • நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல வகைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர், அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும் நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.

    இதனை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல வகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம், பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    இன்று காலை ஐயாறப்பர் அம்பாள், அறம் வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், சுயசாம்பிகை தனி பல்லகிலும் நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு சென்றது.

    திருமழாப்பாடியில் இன்று இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    நந்தி பார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள். அதனை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    பிறகு சாமிப்புறபட்டு திருவையாறை வந்தடையும்.

    விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுர ஆதீன கட்டளை விசாரனை ஸ்ரீமத் ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×