search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாக மாற்றம் ஏற்கத்தக்கதல்ல
    X

    பசும்பொன் பாண்டியன்

    கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாக மாற்றம் ஏற்கத்தக்கதல்ல

    • மக்கள் நலன் கருதி கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாக மாற்றம் ஏற்கத்தக்கதல்ல.
    • பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் இன்று வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழக அரசு அண்மையில் அரசு ஆணை மூலமாக பிரமலைக்கள்ளர் சமூகத்தின் உழைப்பாலும் நிதியாலும் உருவாக்கப்பட்ட கள்ளர் பொது நலன் நிதிக் குழுமம் மூலமாக உருவான கள்ளர் சீரமைப்புத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலரிடம் ஒப்படை ப்பது ஏற்கத்தக்கது அல்ல, கண்டிக்கத்தக்கது ஆகும்,

    தென் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகள் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தி லிருந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) நிர்வாகத்தின் கீழ் இதுவரை இயங்கி வந்தன.

    எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மாற்றம் செய்வதற்கான ஆணைப்பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டித்தேவர் போன்ற வர்கள் கோரிக்கையை ஏற்று ஆணை திரும்பப் பெறப்ப ட்டது, தற்சமயம் தி.மு.க. அரசு இந்த ஆணையை பிரமலைக்கள்ளர் மக்களின் நலன்கருதி உடனே திரும்ப பெற வேண்டும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக கள்ளர் சீரமைப்பு விடுதிகள் அவை செயல்படும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மூலம் நிர்வகிக்கலாம், ஆனால் கள்ளர் சீரமைப்பு கட்டு ப்பாட்டில் இருந்த போது ஒவ்வொரு விடுதியும் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருந்தது.

    Next Story
    ×