search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்ஜ் மேலாளர் கொலை: ரூ.1,000 கடன் தராததால் கொன்ற ராஜஸ்தான் வாலிபர்
    X

    கைதான கோபாலகிருஷ்ணன்.

    லாட்ஜ் மேலாளர் கொலை: ரூ.1,000 கடன் தராததால் கொன்ற ராஜஸ்தான் வாலிபர்

    • ரூ. 1,000 கடன் தராததால் லாட்ன் மேலாளரை கொன்ற ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போதிய அளவு வருமானம் கிடைக்காததால் கோபாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக விடுதி மாத வாடகை கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் வடக்கு பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இதன் மேலாளர் தர்மராஜ் நேற்று காலை கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திடீர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது தர்மராஜ் கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

    தனியார் விடுதி மேலாளர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வாலிபர் மீது சந்தேகம்

    கொலை நடந்தபோது விடுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ஆப் செய்யப்ப ட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மற்ற சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அப்போது கொலை நடந்த தனியார் விடுதியில் இருந்து ஒரு வாலிபர் அதிகாலை 3 மணிக்கு வெளியே செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் விடுதியில் இருந்து வெளியே சென்ற வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என தெரியவந்தது. உடனே போலீசார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட் டிருந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    கோபாலகிருஷ்ணனின் செல்போன் நம்பரை வைத்து தொழில்நுட்ப உதவியோடு விசாரணை நடத்தியதில் விருதுநகரில் பதுங்கி இருந்தார். இதை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று கோபாலகிருஷ்ணனை கையும் களவுமாக விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மதுரைக்கு அழைத்துவரப்பட்ட ராஜஸ்தான் வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது பணத்துக்காக மேலாளர் தர்மராஜை கொலை செய்தது தெரியவந்தது.

    துணி வியாபாரம்

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரையில் விடுதியில் தங்கி இருந்து ஜவுளி கடைகளுக்கு வட மாநிலங்களில் இருந்து துணிகளை இறக்குமதி வியாபாரம் செய்து வந்தார். இதில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் கோபாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக விடுதி மாத வாடகை கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

    விடுதி மேலாளர் தர்மராஜ் கோபாலகிருஷ்ணன் மாத வாடகை பணத்தை தருமாறு வலி யுறுத்தியுள்ளார். இல்லையெனில் அறையை காலி செய்யுமாறு கூறி வந்து உள்ளார்.

    தர்மராஜூடம் அதிக பணப்புழக்கம் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் ரூ.ஆயிரம் கடனாக தருமாறு கேட்டுள்ளார். ஆனால் தர்மராஜ் தர மறுத்ததோடு விடுதி மாத வாடகை செலுத்துமாறு கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதி காலையில் கோபால கிருஷ்ணன் அறையில் இருந்து வெளியே வந்தபோது தர்மராஜ் மட்டும் வரவேற்பறையில் இருந்தார். அப்போதும் அவரிடம் ரூ. ஆயிரம் கடனாக தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததோடு தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் மேலாளர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தர்மராஜ் தவறி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கோபாலகிருஷ்ணன் அதிக சிரமத்துடன் இழுத்து பறித்துள்ளார். இதில் தர்மராஜ் கழுத்தில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். இதையடுத்து லாட்ஜை விட்டு அவசரமாக வெளியேறிய கோபாலகிருஷ்ணன் திருடிய நகையுடன் ராஜஸ்தானுக்கு தப்பிச்செல்ல திட்ட மிட்டுள்ளார். விருதுநகரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×