search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுகிறது
    X

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார். அருகில் ஜூபிலி டைமண்ட் கிளப் தலைவர் மணிவாசகம், செயலாளர்-முன்னாள் சேர்மன் செல்வராஜ், நகராட்சி தலைவர் முகமது யாசின் உள்ளனர்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுகிறது

    • தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுகிறது என அமைச்சர் மூர்த்தி ெபருமிதம் கொண்டார்.
    • அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேலூர்

    மேலூர் டைமண்ட் ஜூபிலி கிளப் சார்பில் மேலூர் தாலுகா அளவில் அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தனியார் பள்ளிக்கு இணையாக தமிழக அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன.

    50 சதவீதத்திற்கு மேல் அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவல கங்களிலும் பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் 60 சதவீதத்திற்கும் மேல் படித்துவிட்டு தங்களது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர்.கிராமப்புற மாணவ-மாணவிகள் 12 -ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்வி பயில முடியாமல் இருந்து வந்தனர். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மேல் படிப்பு படிப்பதற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றார்.

    அதனைத் தொடர்ந்து மேலூர் டைமண்ட் ஜுபிலி கிளப் சார்பில் மேலூர் அரசு கலைக் கல்லூரி சாலை சந்திப்பில், சிவகங்கை சாலை உள்ள 4 வழிச்சாலை பாலம் அருகில், மேலூர் - மதுரை 4 வழிச்சாலை ஆகிய இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை அமைச்சர் மூர்த்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

    டைமண்ட் ஜுபிலி கிளப் செயலாளரும், மேலூர் முன்னாள் யூனியன் சேர்மனுமான செல்வராஜ் வரவேற்றார். நகராட்சி தலைவர் முகமது யாசின், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டு ராஜன், தலைமை ஆசிரியர்கள் கொட்டாம்பட்டி சித்ரா ஹெலன், மேலூர் செந்தில் நாயகி, செம்மிணிபட்டி சுகுணா கலாமதி, திருவாதவூர் சிவக்குமார், கருங்காலக்குடி கண்மணி மாதா, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் துரை மகேந்திரன், பொருளாளர் ரவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், மலம்பட்டி முருகன், மார்க்கெட் ராஜேந்திரன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளப் பொருளாளர் வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×