என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி'' என்ற பழமொழி மதுசூதனனுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த நிருபர்களுக்கு பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீநகரில் நடைபெறும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். மாநில உரிமை மற்றும்  நிதி தன்னாட்சி பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக நின்றதின் அடிப்படையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த கூட்டம் நடை பெறுகிறது.

    திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் என்னை வெளியேற்றினால்தான் இணக்கமான பேச்சுவார்த்தை நடை பெறும் என மதுசூதனன் கூறி இருப்பது, "அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி'' என்ற பழமொழி மதுசூதனனுக்கு பொருந்தும்.


    பிரிந்து போன சகோதரர்கள் மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம். வாருங்கள் பேசுவோம், கட்சியிலும், ஆட்சியிலும் உரிய மரியாதை முக்கியத்துவம் கொடுப்போம் என்றுதான் கூறி உள்ளோம்.

    ஓ.பி.எஸ். அணியினர்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். நிபந்தனை விதிக்கிறார்கள். எங்களை பற்றிய விமர்சனங்களை ஓரளவுதான் பொருத்துக் கொள்ள முடியும்.

    ஆனால் நாங்கள் அவர்களை போல தரம் தாழ்ந்து பேச மாட்டோம். பேச்சுவார்த்தைக்கு முட்டுக் கட்டையாக இருப்பது அவர்களே.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு அருகே 5 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    பஸ் ஊழியர்கள் போராட்டம் காரணமாக செங்கல்பட்டு பகுதியில் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

    செங்கல்பட்டு பணிமனையில் மொத்தம் உள்ள 125 பஸ்களில் 18 பஸ்கள் மட்டுமே ஓடியது. கிராமங்களுக்கு 2-வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    செங்கல்பட்டை அடுத்த இருகுன்றப்பள்ளி அருகே நேற்று இரவு சென்னையில் இருந்து நெய்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மர்ம கும்பல் கல்வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.

    இதேபோல் திம்மராஜ குளம் அருகே பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மீதும், கூடுவாஞ்சேரி அருகேயும், ஊரப்பாக்கம் அருகேயும், வண்டலூரை அடுத்த இரணியம்மன் கோவில் அருகேயும் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது.

    இதில் பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காஞ்சீபுரம் போக்குவரத்து மண்டல மேலாளர் ரகு நாதன் கூறும்போது, ‘பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    தனியார் பஸ்கள், தனியார் நிறுவன பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.

    பெரியபாளையத்தை அடுத்த எர்ணாகுப்பம் அருகே இன்று காலை ஆரணியில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ் சென்றது. அப்போது மர்ம கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. டிரைவர் அருள் படுகாயம் அடைந்தார். இதனால் பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
    விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசு தலைமையில் மதுக்கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த அன்னை அஞ்சுகம் நகரில் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சிலர் மதுக்கடைக்குள் புகுந்து ஊழியர்களை விரட்டினர். மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் மதுக்கடைக்கும் தீவைத்தனர்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, தாம்பரம் தொகுதி செயலாளர் ரஞ்சன், தொகுதி துணைச் செயலாளர் ஆதிசாலமன், முன்னாள் நகர செயலாளர் சாமுவேல் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவர் மீதும் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி 50 அடி தூரத்தில் சரிந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சந்திரசேகர் (வயது27) டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ரவிக்குமாருடன்(26) பைக்கில் மாமல்லபுரத்தில் இருந்து வெண்புருஷம் நோக்கி சென்றார்.

    கொக்கிலமேடு சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி 50 அடி தூரத்தில் சரிந்தபடி கவிழ்ந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகரும், ரவிக்குமாரும் உயிருக்கு போராடினர். அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்காக ஒரு மணிநேரம் காத்துக்கிடந்தனர்.

    ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் 2 பேரையும் ஷேர் ஆட்டோவில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் உயிரிழந்தார்.

    ரவிக்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதியில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததே பல உயிர் இழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூரை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அதிக அளவிலான தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    போக்குவரத்து ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காஞ்சீபுரம் பணிமனையில் மொத்தம் 74 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 41 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அதிக அளவிலான தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.

    தற்போது தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருத்தணி, பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் கிராமப்புறங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகள் அனைத்தும் நகர் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

    இதனால் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளதால் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர்களை நியமிக்கும் தேர்வு காஞ்சீபுரம் பணி மனையில் நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் நகர் பகுதியில் நேற்று அதிக அளவு தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஓடின. இன்று அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு பஸ்கள் ஓரளவு ஓட ஆரம்பித்து இருப்பதால் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பொறுத்து மீண்டும் அந்த பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளன என்றார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளில் திருவள்ளூரில்-58, திருத்தணியில்-71, ஊத்துக்கோட்டையில்-40, பொன்னேரியில்-50, பொதட்டுர்பேட்டையில்-13, ஆர். கே.பேட்டையில்-20 என மொத்தம் 252 பஸ்கள் உள்ளன.

    இதில் திருவள்ளூரில்-22, ஊத்துக்கோட்டையில்-8, திருத்தணியில்-15, ஆர். கே.பேட்டையில்-13, பொதட்டுர்பேட்டையில் ஓடவில்லை, பொன்னேரி யில் 26 பஸ்களும் மொத்தம் 84 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக இயங்கியதால் பயணியர் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு பஸ்சில் புதிய டிரைவர்களை கொண்டு இயக்குவதால் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
     
    திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிக்கு இயங்கும் தனியார் பஸ்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் கிராமப் பகுதிகளில் இருந்து திருவள்ளூருக்கு வரும் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.

    பல மணி நேரம் காத்திருந்து வேன், ஷேர் ஆட்டோக்களில் சென்றனர். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தனர்.

    திருவள்ளூர் பணிமனையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது. டிரைவர்களை பஸ்சை ஓட்டச் செய்து அவர்களது திறனை போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பின்னரே அவர்கள் அரசு பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    போக்குவரத்துதுறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.

    அ.தி.மு.க இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் உங்களை முதல் -அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.

    அதற்கு ஓ. பன்னீர்செல்வம், அது பற்றி கே.பி. முனுசாமி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார் என்றார்.
    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் கத்தாரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    கத்தாரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஆந்திராவை சேர்ந்த அகமது பாட்ஷா முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது பையில் சோதனை செய்தபோது எமர்ஜென்சி லைட் இருந்தது. அதை உடைத்தபோது 1 கிலோ எடையுள்ள 11 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    இதையடுத்து அகமது பாட்ஷாவை கைது செய்து விசாரிக்கிறார்கள்.
    போக்குவரத்து ஊழியர்கள் `ஸ்டிரைக்' காரணமாக காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் ஓடின. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    காஞ்சீபுரம்:

    போக்குவரத்து ஊழியர்கள் `ஸ்டிரைக்' காரணமாக காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் ஓடின. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    காஞ்சீபுரம், மதுராந்தகம், உள்ளிட்ட பணிமனைகள் மூலம் 837 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று காலை நிலவரப்படி 153 பஸ்கள் மட்டுமே இயங்கின.

    காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் காத்து இருந்தனர். குறைந்த அளவு பஸ்கள் வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் காஞ்சீபுரம் அருகே உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நகர பஸ்களாக இயங்கி வந்த தனியார் பஸ்கள் செங்கல்பட்டு, திருத்தணி போன்ற ஊர்கள் வரை இயக்கப்பட்டது.
    பயனிகள் அதிக அளவில் செல்லும் ஊர்கள், இடங்கள் பற்றி மணிக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த தடத்தில் தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட கெலக்டர் பொன்னையா தெரிவித்தார்.

    காஞ்சீபுரத்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் தினந்தோறும் சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் அந்த தடத்தில் கூடுதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருப்பதி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தவர்கள் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் காஞ்சீபுரம் திரும்பி இருந்தனர். அவர்கள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் இன்று காலை 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறைந்த அளவில் ஓடிய பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தாம்பரம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர்,, கல்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளுக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. மதியம் வரை நிலைமை சீர் ஆகவில்லை என்றால் பயிற்சி டிரைவர், கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவள்ளூரில் நேற்று மாலை முதல் போக்கு வரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் திருவள்ளூரில் 58, திருத்தணியில் 71, ஊத்துக்கோட்டையில் 40, பொன்னேரியில் 50, பொதட்டூர்பேட்டை 13, ஆர்.கே.பேட்டை-20 என மொத்தம் 252 பஸ்கள் உள்ளன.
    இதில் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் திருவள்ளூரில்-27, ஊத்துக்கோட்டை-18, திருத்தணி-71, ஆர்.கே.பேட்டை-12, பொதட்டூர்போட்டை-2, பொன்னேரி-27 என மொத்தம் 104 பஸ்கள் இயக்கப்பட்டன.

    செங்குன்றம் பகுதியில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாதவரம் பணிமனையில் மொத்தம் 102 பஸ்கள் உள்ளன. இதில் இன்று 60 பஸ்கள் மட்டும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பணிமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாடியநல்லூரில் உள்ள பணிமனையில் 56 பஸ்களில் 10 பஸ்கள் மட்டும் ஓடியது.

    செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு தனியார் நிறுவன பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஊத்துக்கோட்டை அரசு பஸ் டெப்போவில் மொத்தம் 40 பஸ்கள் உள்ளன. இவற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெறும் 7 பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
    பஸ் டெப்போ எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி சென்றனர்.

    அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் மாவட்டத்தில்  உள்ள திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பொதட்டூர் பேட்டை போக்குவரத்துக் கழக பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி, அங்கேயே ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவொரு தவறும் இல்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார் அதை சில சங்கங்கள் ஏற்று கொள்ளாததால் போராட்டம் உருவாகி இருக்கிறது. போக்குவரத்து அமைச்சர், மீண்டும் தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சொல்லி இருக்கிறார்.

    தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு சரியான முறையில் மேற்கொண்டு வருகிறது.



    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி அங்கேயே ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவொரு தவறும் இல்லை. நானும் கூட பல மாநிலத்தின் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறேன், கலந்து கொண்டும் இருக்கிறேன்.

    மத்திய மந்திரி ஆய்வு கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வருமான வரித்துறை வெளியிட்ட பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் மற்றொரு பகுதி தொடங்கப்படுகிறது. தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து, பக்கபலமாக இருப்பது என மத்திய அரசு கொள்கையாக கொண்டு உள்ளது.

    பிரதமர் மோடி இலங்கை பயணம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களால் பாராட்டப்படுகிறது. தமிழகம் மீது மத்திய அரசு பாரபட்சமாக இருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்களை சொல்பவர்கள் இலங்கையில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு தவறு என உணர்ந்து இருப்பார்கள்.

    கவர்னர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை மறுக்கிறேன். முழுநேர கவர்னர் இருந்தால் தான் அக்கறை செலுத்துவார் என கூறமுடியாது. அரசியலமைப்பு சட்டப்படி 2 மாநிலங்களை கவர்னர் நிர்வகிக்கலாம். நிர்வாக ரீதியாக கவர்னர் எந்த குறைபாடும் வைக்கவில்லை.



    மாநிலத்தில் தவறுகள் நடக்கும்போது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. வருமான வரித்துறை அமைச்சர்கள் மீது சந்தேகம் இருப்பதாக வெளியிட்ட பட்டியல் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர்கள் காமராஜ், சரோஜா ஆகியோர் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    பாரதிய ஜனதா ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தாம்பரத்தில் தலைமை செயலக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரில் வசித்து வந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது35).

    சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஸ்டாலின் (6) என்ற மகனும், ரோஸ்லின் (4) என்ற மகளும் உள்ளனர்.

    தீபன் சக்கரவர்த்தி கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். மனைவி கடைக்கு சென்று இருந்தார். குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர்.

    கடைக்கு சென்று திரும்பிய சுதா திரும்பி வந்தபோது தீபன் சக்கரவர்த்தி மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

    தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலை செய்த இடத்தில் அவருக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததா? வேலை பளுவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.
    சென்னை அருகே ரூ.1 கோடி மருந்து பொருட்களுடன் லாரியை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து கண்டெய்னர் லாரிகளில் மருந்து மூலப்பொருட்கள் சென்னை கொண்டு வரப்பட்டு கப்பல், விமானங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்.

    கடந்த 4-ந்தேதி ரூ. 1 கோடி மதிப்புள்ள மருந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சேகர் ஓட்டினார். பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் உடன் இருந்தார். லாரிக்கு பின்னால் காரில் ஊழியர்கள் தாமஸ், வெங்கடேசன் ஆகியோர் வந்தனர்.

    சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் என்ற இடத்தில் 10 பேர் கும்பல் லாரியை மறித்தது. தாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி லாரியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

    திடீரென்று அக்கும்பல் டிரைவர் சேகர் உள்பட 4 பேரையும் அரிவாளால் தாக்கியது. பின்னர் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தீவிர விசாரணை நடத்தி ராணிப்பேட்டையைச் சேர்ந்த மணி என்கிற சதீஸ்குமார், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கணேசன், ஆவடியைச் சேர்ந்த ஜெயக்குமார், படப்பையைச் சேர்ந்த அமானுல்லா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பழனி, ரவிக்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சதீஸ்குமார் ராணிப்பேட்டை மருந்து தொழிற்சாலையில் 3 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    அப்போது வேலூர் சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் நண்பர் சரவணன் என்பவரிடம் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் தயாரிக்கும் மருந்து மூலப்பொருள் மூலம் போதை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து சரவணன் சிறையில் இருந்தபடியே தனது ஆட்களை ஏற்பாடு செய்து சதீஷ்குமாருடன் சேர்ந்து கொள்ளையடிக்க அனுப்பி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து 7 பேரையும் கைது செய்தனர். வேலூர் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    ×