என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர்-காஞ்சீபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவில் பஸ்கள் ஓடின
Byமாலை மலர்15 May 2017 10:08 AM GMT (Updated: 15 May 2017 10:08 AM GMT)
போக்குவரத்து ஊழியர்கள் `ஸ்டிரைக்' காரணமாக காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் ஓடின. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், மதுராந்தகம், உள்ளிட்ட பணிமனைகள் மூலம் 837 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று காலை நிலவரப்படி 153 பஸ்கள் மட்டுமே இயங்கின.
காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் காத்து இருந்தனர். குறைந்த அளவு பஸ்கள் வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் காஞ்சீபுரம் அருகே உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நகர பஸ்களாக இயங்கி வந்த தனியார் பஸ்கள் செங்கல்பட்டு, திருத்தணி போன்ற ஊர்கள் வரை இயக்கப்பட்டது.
பயனிகள் அதிக அளவில் செல்லும் ஊர்கள், இடங்கள் பற்றி மணிக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த தடத்தில் தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட கெலக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சீபுரத்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் தினந்தோறும் சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் அந்த தடத்தில் கூடுதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பதி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தவர்கள் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் காஞ்சீபுரம் திரும்பி இருந்தனர். அவர்கள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று காலை 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறைந்த அளவில் ஓடிய பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
இதனால் செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தாம்பரம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர்,, கல்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளுக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. மதியம் வரை நிலைமை சீர் ஆகவில்லை என்றால் பயிற்சி டிரைவர், கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் நேற்று மாலை முதல் போக்கு வரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் திருவள்ளூரில் 58, திருத்தணியில் 71, ஊத்துக்கோட்டையில் 40, பொன்னேரியில் 50, பொதட்டூர்பேட்டை 13, ஆர்.கே.பேட்டை-20 என மொத்தம் 252 பஸ்கள் உள்ளன.
இதில் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் திருவள்ளூரில்-27, ஊத்துக்கோட்டை-18, திருத்தணி-71, ஆர்.கே.பேட்டை-12, பொதட்டூர்போட்டை-2, பொன்னேரி-27 என மொத்தம் 104 பஸ்கள் இயக்கப்பட்டன.
செங்குன்றம் பகுதியில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாதவரம் பணிமனையில் மொத்தம் 102 பஸ்கள் உள்ளன. இதில் இன்று 60 பஸ்கள் மட்டும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பணிமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாடியநல்லூரில் உள்ள பணிமனையில் 56 பஸ்களில் 10 பஸ்கள் மட்டும் ஓடியது.
செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு தனியார் நிறுவன பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஊத்துக்கோட்டை அரசு பஸ் டெப்போவில் மொத்தம் 40 பஸ்கள் உள்ளன. இவற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெறும் 7 பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
பஸ் டெப்போ எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி சென்றனர்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பொதட்டூர் பேட்டை போக்குவரத்துக் கழக பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
×