search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private buses"

    • ஏர்ஹாரன் சத்தத்தால் பைக் ஓட்டிகள் அவதி
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், மதகடிப்பட்டு, பாகூர், வில்லியனூர், வீராம்பட்டினம், கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடங்களில் அதிகளவு டிக்கெட் கலெக்ஷனுக்காக பயணி களை முந்தியடித்துக் கொண்டு ஏற்றிசெல்ல தனியார் பஸ்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. பயணிகளை பஸ்களில் ஏற்றி செல்வதில் டைமிங் தகராறும் ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்தில் பல மணி நேரம் காத்து இருந்து விட்டு புறப்படும் நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வரும் தனியார் பஸ்கள் ஓயாது ஏர்ஹாரன்களை ஒலித்தப்படி வருகின்றனர். தனியார் பஸ்கள் புறவழிச்சாலை மட்டுமின்றி நகரப்பகுதி யிலேயே அதிவேகத்தில் செல்கின்றனர்.

    அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் ஏர்ஹாரனை அதிக சத்தத்தில் ஒலித்தப்படி செல்கிறது.திடீரென இந்த சத்தத்தை கேட்டு ரோட்டில் செல்லும் பைக் ஓட்டிகள், நடந்து செல்லும் பொது மக்கள் நடுங்கி அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. புதுச்சேரி பஸ்நிலை யத்திலும் இதே நிலைமைத்தான் நீடிக்கிறது.

    குறிப்பாக புதுவை- கடலூர் சாைலயில் ரோடியர்மில் ரெயில்வே கேட்டில் ரெயில் வருவதற்குள் முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து ஏர்ஹாரனை ஒலித்தப் படியே அதிவேகமாக வருகின்றனர்.

    இந்த திடீர் ஏர்ஹாரன் சத்தத்தால் பஸ்சிற்கு காத்தி ருக்கும் பயணிகள் அலறியடித்து ஓடிச்செல்லும் நிலைமை ஏற்படுகிறது. அவ்வப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தனியார் பஸ்களில் ஏர்ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தாலும் தொடர்ந்து புதுவையில் இந்நிலை நீடிக்கிறது.

    மேலும் இளைஞர்களும் பைக்கில் சாலையில் செல்பவர்களை மிரண்டு செல்லும் வகையில் விதவிதமான ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

    • பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கப்படுமா? பழுதான பஸ்களால் தினமும் அவதிபடும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரை

    மதுரையில் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்திலும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரையில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் அதிக அள வில் பயணிகள் கூட்டம் இருக்கும். தற்போது உள்ள பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஓருசில பஸ்கள்தான் நன்றாக உள்ளன. பல பஸ்கள் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருந்த போதிலும் பயணிகள் அவைகளின் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணி களை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்கள் ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிருக்கு தனி பஸ்கள் இயக்கவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறு கின்றனர்.

    • ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.
    • வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மார்க்கமாக பழநி-கோவை இடையே இயக்கப்படும் பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச்சென்று திரும்புவோர், அவசர கதியில் கிடைக்கும் பஸ்களில் ஏறிச்செல்கின்றனர்.

    பயணிகளை அள்ளிச்செல்லும் நோக்கில் அரசு பஸ்களுடன் போட்டி போடும் தனியார் பஸ்கள், ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.தொடர்ந்து, வேகமெடுத்து இயக்கப்படும் பஸ்கள் எதிரே வரும் வாகனங்களுக்குக்கூட வழிவிடாமல் ஒன்றையொன்று முந்திச்செல்கின்றன.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பீதிக்கு உள்ளாகி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.அதேபோல் வழியில் உள்ள வேகத்தடைகளை கூட கண்டுகொள்ளாமல், வந்த வேகத்திலேயே அதன்மீதுபஸ்களை கடக்கச்செய்வதால், பஸ் பயணிகள் மட்டுமின்றி, ரோட்டோரம் செல்லும் மக்களும் பீதியில் உறைந்து விடுகின்றனர்.சில தனியார் பஸ்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் இயக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

    எனவே தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
    • விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்களின் வருகைக்கேற்ப இடவசதி இல்லாததால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே பஸ்நிலையத்திற்குள் நுழைய பெர்மிட் பெறாத தனியார் பஸ்களும் அடிக்கடி உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மற்ற டிரைவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுமட்டுமின்றி தனியார் பஸ்கள் தாங்கள் பெர்மிட் வாங்கிய வழித்தடத்தில் செல்லாமல் அதிக கலெக்சன் கிடைக்கும் வழித்தடத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுபோல விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பஸ்கள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் - உடுமலை வழித்தடத்தில் பல்லடம், கேத்தனூர், ஜல்லிபட்டி, செஞ்சேரிபுத்துார், குடிமங்கலம் என50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் ரெயில்கள் வழியாக திருப்பூர் வந்திறங்கி, குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம், மறையூர் மற்றும் மூணார் செல்ல அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ் வசதியாக இருந்தது.

    அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதிகாலையில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில், மீண்டும் இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருப்பூரிலிருந்து அதிகாலை 4 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும், 4:30 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும் உடுமலைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்களையும் இயக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில், குறை தீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் சம்பந்தபட்ட 2 தனியார் பஸ்களும் உரிய கால அட்டவணைப்படி இயக்க வேண்டும், என திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    உடுமலையிலிருந்து திருப்பூருக்கும், அங்கிருந்து உடுமலைக்கும் தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய அளவு பஸ்கள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, பயணிகள் அதிகம் வந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. #Koyambedubusstand
    சென்னை:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (சி.எம்.டி.ஏ.) நிர்வகித்து வருகிறது.

    தனியார் ஆம்னி பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள இடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய அடுக்குமாடி நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பஸ்கள் கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் நெருக்கடி குறைந்துள்ளது.

    இதற்கிடையே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் ஜவகர்லால் நேரு சாலை- காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் 360 பஸ்கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஆனால் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு நெரிசலை குறைக்க தனியார் பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறும் போது, கோயம்பேட்டில் இருந்து நீண்ட நேரம் செல்லும் பஸ்கள் மாதவரம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 இடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் தனியார் பஸ்களுக்கு கோயம்பேட்டில் இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. காலி இடங்கள் ஏலம் விடப்படுகிறதா அல்லது ஆம்னி பஸ்கள் இயக்க கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதா என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார். #Koyambedubusstand
    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்களில் அதிகளவு கட்டணத்தை வசூலித்ததை கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி உள்ள நாட்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு சிறப்பு பஸ்களிலும் வேகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    பண்டிகை கால பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் தங்களது கட்டணத்தை 2 மடங்கு உயர்த்திவிட்டன. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.1650 முதல் 2250 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

    படுக்கை வசதி இல்லா பஸ்களில் ரூ.1300 முதல் ரூ.1490 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரங்களை தனியார் ஆம்னி பஸ்கள் ‘ஆன்-லைனில்’ வெளிப்படையாகவே வெளியிட்டு உள்ளது.

    இதேபோல் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு பஸ்களை விட குறிப்பிட்ட நேரத்துக்குள் சொகுசான பயணம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை பொதுமக்கள் நாடிச்செல்லும் நிலை உள்ளது.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். எனினும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கட்டண கொள்ளையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆயுதபூஜை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.

    விடுமுறை முடிந்து இவர்கள் நேற்று ஊர் திரும்பினார்கள். இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இருக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படும். படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1500 கட்டணம் ஆகும். சில ஆம்னி பஸ்களில் நேற்று இந்த கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.3000-ம் வரை வசூல் செய்யப்பட்டது.

    இந்த கட்டண கொள்ளையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டண கொள்ளையை கண்டித்து குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் இடையில் உள்ள ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாமல் பல பஸ்கள் சென்றதால் பஸ் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
    கரூரில் தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை அகற்றி கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
    கரூர்:

    கரூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக ஒலி எழுப்பும் வகையிலான காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதால் இரைச்சல் அதிகமாகி ஒலிமாசு ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.

    அதன்பேரில் நேற்று காலை கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், தனசேகரன், மீனாட்சி, ரவிசந்திரன், கரூர் நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் கரூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த தனியார் பஸ்களின் ஒலிப்பான்களை இயக்க செய்து சோதனையிட்டனர். அதில் பலதரப்பட்ட மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 30 தனியார் பஸ்களில் இருந்து காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன. மேலும் விதிகளை மீறி பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் அலங்கார விளக்குகள் தொங்கபட்டிருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் இருந்து பாதுகாப்பு கருதி அலங்கார விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அங்குள்ள கரூர் மினி பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 25 காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன.

    இதுபோன்ற ஒலிப்பான்களால் இரைச்சல் அதிகமாகி சுற்றுப்புறத்தில் ஒலிமாசு ஏற்படுகிறது. 85 டெசிபல் ஒலி அளவு வரை தான் காற்றொலிப்பான் இருக்க வேண்டும். ஆனால் அகற்றப்பட்டவை அனைத்தும் கூடுதலாக ஒலி எழுப்பக்கூடியவை ஆகும். இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்ற ஒலி சத்தத்தின் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிலர் இந்த காற்றொலிப்பான் சத்தத்திற்கு பயந்து போய் வாகன கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    எனவே இது பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் தனியார் பஸ், மினிபஸ் உரிமையாளர்கள் ஈடுபட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நிருபர் களிடம் தெரிவித்தார். 
    ×