search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் பஸ்களின் அலற வைக்கும் ஏர்ஹாரன்
    X

    கோப்பு படம்.

    தனியார் பஸ்களின் அலற வைக்கும் ஏர்ஹாரன்

    • ஏர்ஹாரன் சத்தத்தால் பைக் ஓட்டிகள் அவதி
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், மதகடிப்பட்டு, பாகூர், வில்லியனூர், வீராம்பட்டினம், கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடங்களில் அதிகளவு டிக்கெட் கலெக்ஷனுக்காக பயணி களை முந்தியடித்துக் கொண்டு ஏற்றிசெல்ல தனியார் பஸ்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. பயணிகளை பஸ்களில் ஏற்றி செல்வதில் டைமிங் தகராறும் ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்தில் பல மணி நேரம் காத்து இருந்து விட்டு புறப்படும் நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வரும் தனியார் பஸ்கள் ஓயாது ஏர்ஹாரன்களை ஒலித்தப்படி வருகின்றனர். தனியார் பஸ்கள் புறவழிச்சாலை மட்டுமின்றி நகரப்பகுதி யிலேயே அதிவேகத்தில் செல்கின்றனர்.

    அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் ஏர்ஹாரனை அதிக சத்தத்தில் ஒலித்தப்படி செல்கிறது.திடீரென இந்த சத்தத்தை கேட்டு ரோட்டில் செல்லும் பைக் ஓட்டிகள், நடந்து செல்லும் பொது மக்கள் நடுங்கி அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. புதுச்சேரி பஸ்நிலை யத்திலும் இதே நிலைமைத்தான் நீடிக்கிறது.

    குறிப்பாக புதுவை- கடலூர் சாைலயில் ரோடியர்மில் ரெயில்வே கேட்டில் ரெயில் வருவதற்குள் முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து ஏர்ஹாரனை ஒலித்தப் படியே அதிவேகமாக வருகின்றனர்.

    இந்த திடீர் ஏர்ஹாரன் சத்தத்தால் பஸ்சிற்கு காத்தி ருக்கும் பயணிகள் அலறியடித்து ஓடிச்செல்லும் நிலைமை ஏற்படுகிறது. அவ்வப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தனியார் பஸ்களில் ஏர்ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தாலும் தொடர்ந்து புதுவையில் இந்நிலை நீடிக்கிறது.

    மேலும் இளைஞர்களும் பைக்கில் சாலையில் செல்பவர்களை மிரண்டு செல்லும் வகையில் விதவிதமான ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×