வேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை மார்க்கமாக பழநி-கோவை இடையே இயக்கப்படும் பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச்சென்று திரும்புவோர், அவசர கதியில் கிடைக்கும் பஸ்களில் ஏறிச்செல்கின்றனர்.

பயணிகளை அள்ளிச்செல்லும் நோக்கில் அரசு பஸ்களுடன் போட்டி போடும் தனியார் பஸ்கள், ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.தொடர்ந்து, வேகமெடுத்து இயக்கப்படும் பஸ்கள் எதிரே வரும் வாகனங்களுக்குக்கூட வழிவிடாமல் ஒன்றையொன்று முந்திச்செல்கின்றன.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பீதிக்கு உள்ளாகி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.அதேபோல் வழியில் உள்ள வேகத்தடைகளை கூட கண்டுகொள்ளாமல், வந்த வேகத்திலேயே அதன்மீதுபஸ்களை கடக்கச்செய்வதால், பஸ் பயணிகள் மட்டுமின்றி, ரோட்டோரம் செல்லும் மக்களும் பீதியில் உறைந்து விடுகின்றனர்.சில தனியார் பஸ்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் இயக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

எனவே தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com