என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ. தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பழவன்தாங்கல். தாம்பரம் ஆகிய பகுதியில் வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: -

    டி.ஆர்.பாலு மிசா கொடுமையை அனுபவித்தவர் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர்.மேலும் பல நல்ல திட்டங்களை செய்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.அதிமுக மத்திய அரசிடம் கைகட்டி சேவகம் செய்கிறது.

    நீட் தேர்வில் பிஜேபியும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரேகம் இழைத்துவிட்டது. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றிட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை லட்சக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாசுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எஸ்ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #DMK

    எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது என்று பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    தாம்பரம்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போரூர், ஸ்ரீபெருமந்தூர், பல்லாவரம், கீழ்கட்டளை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. ஸ்ரீபெருமந்தூரில் மூடிய அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் வெங்கட்ராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வெங்கடேசன் ஐ.நா.கண்ணன், மாவட்ட செயலாளர் வினாயகம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பா.ஜனதா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேத சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தாம்பரம் மணி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பல்லாவரம் நகரமன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகரன், விஸ்வநாதன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் சந்திரசேகர், ராஜா, வேல் விழி, ஞானசேகரன், பழனி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

    தாம்பரம் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பகத்வாரியா. ராஜஸ்தானில் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சந்தியா தேவி. இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர்களுடன் ராமேஸ்வரம் சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்ட 6 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்பு மாம்பழம் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #PMK

    தாம்பரம்:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் பாடியில் உள்ள திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்பு மாம்பழம் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரித்தார்.

    பாடி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் குறுகலான சாலைகளில் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பாமக துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் அம்பத்தூர் பகுதி செயலாளர் என். அய்யனார், எம்.டி.மைக்கேல்ராஜ்,கே.பி.முகுந்தன் உட்பட, பாஜக தேமுதிக தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட பகுதி வட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #PMK

    ஆதம்பாக்கத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. #Voterid #LokSabhaElections2019

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், பொருட்கள், தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம், சுரேந்தர் நகர் மேடவாக்கம் மெயின் ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 270 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த 7 பேரை அதிகாரிகள் பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை அனைத்தும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடையது என்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தமாக வாக்காளர் அட்டை கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Voterid #LokSabhaElections2019

    வருமான வரி சோதனையின் உண்மையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ITRaid
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. எனவே பா.ஜனதா இயக்கிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. அதனாலே சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பாரபட்சமாக பயன்படுத்துகிறார்கள்.

    ஆயிரக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ரூ.100 கோடி வரை கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். பணம் வினியோகம் ஆகப்போகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் எல்லாம் சோதனைகள் ஏன் நடத்தப்படவில்லை.

    இந்த சோதனை மூலம் தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெறாது.

    இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருக்கிறது. சோதனையின் உண்மையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது. திமுக கூட்டணி அஞ்சாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #ITRaid

    காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளியில் வகுப்பு நடந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #SchoolAccident #RoofFellDown
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள காவாந்தண்டலம் என்ற ஊரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இன்று மதியம் பள்ளி மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இடிந்து விழுந்த பகுதிக்கு ஆசிரியர்கள் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு மாணவர்கள் யாரும் இல்லை.

    மாணவர்கள் உணவு இடைவேளைக்கு வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. #SchoolAccident #RoofFellDown
    காஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வாக்குகள் சேகரித்தார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    திருப்போரூர்:

    காஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் வாக்குகள் சேகரித்தார். அவர் பேசியதாவது:-

    காஞ்சிபுரம் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் மரகதம்குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு போட்டியிடும் ஆறுமுகம் ஆகியோரை பெருவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றால் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக உருவாக்குவது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    மேலும் தொகுதிமக்களுக்காக பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கேட்டு பெற்று தொகுதிவளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பார்கள். எங்களின் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மீண்டும் மோடி பிரதமரானால் ஜிஎஸ்டி வரிகுறைப்பு, வேலைவாய்பை அதிகரித்தல். இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்ற வலியுறுத்தப்படும். சதிகாரர்கள், சூழ்ச்சிகாரர்களுக்கு இந்த தேர்தலில் தக்கபாடம் புகட்டுங்கள். 40 பாராளுமன்ற தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளில் நம் கூட்டணி வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க, புரட்சிபாரதம்,த.மா.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணிகட்சி தொண்டர்கள் கட்சிகொடியுடன் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    போரூர் ஏரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் ஏரியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் அரிவாள் வெட்டு விழுந்து இருந்தது.

    இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமி‌ஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். லுங்கியும் சட்டையும் அணிந்து இருந்தார்.

    கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. உடல் கிடந்த இடம் அருகே மது பாட்டில்கள் கிடந்தன.

    எனவே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் முன்விரோதத்தில் யாரேனும் அவரை கடத்தி கொலை செய்துவிட்டு உடலை இங்கு வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    செங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, திம்மராஜ குளம், ஜி.எஸ்.டி. சாலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதன் திறப்பு விழாவை வரும் நாட்களில் நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கீற்று கொட்டகை முழுவதும் தீப்பற்றி கரும் புகை ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்கள்எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    டி.எஸ்.பி. கந்தன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் குமார் செங்கல்பட்டுபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் அலுவலகத்தை மர்ம கும்பல் தீ வைத்து எரித்து இருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் யோகேஷ் பி.மகசி, டெசிஸ்தான், சிவகுமார் வர்மா முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் முறையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

    பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடத்தில் பிரசாரம் செய்ய வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan


    ×