search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தி.மு.க. சார்பில் உண்ணாவிரத அறப்போர்
    X

    தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத அறப்போரில் கலந்து கொண்டவர்கள்.

    தஞ்சையில், தி.மு.க. சார்பில் உண்ணாவிரத அறப்போர்

    • நீட் தேர்வு ரத்து மசோதாவிற்கு கையெழுத்திடாத கவர்னரை கண்டித்தும் உண்ணாவிரதம்.
    • கல்லூரி மாணவ- மாணவிகள், நிர்வாகிகள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவிற்கு கையெழுத்து இடாத கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மருத்துவர் அணி, மாணவர் அணி ,இளைஞரணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞரணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரதத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார்.

    எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் அணி மாநில துணை அமைப்பாளரும் துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி வரவேற்று பேசினார்.

    இதில் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், தி.மு.க. நிர்வாகிகள் என ஏராளமானோர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பேசினர். உடனே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

    இந்த உண்ணாவிரத அறப்போரில் விவசாய அணி அமைப்பாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட அவைதலைவர் இறைவன், மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, மேத்தா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, அருளானந்தசாமி, செல்வகுமார், செல்லகண்ண, சிவசங்கரன், உலகநாதன், செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் முகில் வேந்தன் ( மத்திய ), ராஜா ( வடக்கு), ஆதி ராஜேஷ் (தெற்கு ), துணை அமைப்பாளர்கள் செந்தமிழ் செல்வன், சுரேஷ், வெங்கடேசன், ராஜேஷ் கண்ணா, உதயநிதி, அரிதரன், மாணவரணி அமைப்பாளர் ஆசாத், மருத்துவர் அணி அமைப்பாளர் வசந்தகுமார், கவுன்சிலர் உஷா, விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் ராணிகண்ணன் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு துறை மருத்துவர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×