search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும்-பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
    X

    வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் பேசிய காட்சி.


    இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும்-பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்

    • புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் சிறப்பு தொழில் மண்டலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சக்திகுமார், அமுத கணேசன், மாவட்ட துணை தலைவர் சேதுராஜ், ஒன்றிய தலைவர்கள் கனகவேல், பார்த்திபன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கண்ணன், சுப்பாராம், குருசாமி, லிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையிலும், தீப்பெட்டி உற்பத்திக்கும் சிறப்பு தொழில் மண்டலம் அமைக்க வேண்டும்.

    ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். விளாத்திகுளம் பகுதி விவசாயிகள், விளைபொருட்களுக்கு விலை கிடைக்காத காலத்தில், அதனை பாதுகாத்து சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×