search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
    X

    சுகாதாரம் குறித்து உறுதிமொழி எடுத்துகொண்ட போது எடுத்தபடம்.


    சிவகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

    • சிவகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்படி (மாஸ் கிளீனிங்) ஒட்டுமொத்த துப்புரவு பணி அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி ஸ்டெல்லா மேரீஸ் கல்வியல் கல்லூரியில் வைத்து விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உரப்பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை இயற்கை உரங்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய விவசாய உற்பத்தி குறித்தும், இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளையக்கூடிய விளை பொருட்களால் ஏற்படும் பயன்கள் குறித்தும்,

    குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், வரிவிதிப்பு குழு உறுப்பினர் செந்தில் வேல், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, மருதவள்ளி முருகன், சித்ராதேவி, தலைமை எழுத்தர் தங்கராஜ், மாடசாமி, சக்திவேல், குமார், தினேஷ் குமார், லாசர் எட்வின் ராஜாசிங், செல்லப்பன் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×