search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த  கலெக்டர்களுக்கு விருது
    X

    தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், நாகை கலெக்டர்அருண்தம்புராஜ்.

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த கலெக்டர்களுக்கு விருது

    • மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றனர்.
    • அவர்களின் சேவைப்பணி தொடர வாழ்த்துக்கள் என்றனர்.

    தஞ்சாவூர்:

    மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்ததற்காக சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த விருது மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.

    கலெக்டர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அருண்தம்புராஜ் ஆகியோரால் டெல்டா மாவட்டங்களுக்கு பெருமை கிடைத்துள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி சென்று சேருவதில் உறுதியாக இருப்பார்கள். கடைகோடி மக்கள் வரை நலத்திட்ட உதவி செல்ல நடவடிக்கை எடுப்பர்.

    மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேதுபாவாசத்திரம் அருகே செறுபாலக்காட்டையை சேர்ந்த லதா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு கட்ட உதவி செய்தார். பின்னர் அந்த வீட்டை திறந்து வைத்து அவரிடம் ஒப்படைத்தார். இதுபோல் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். மாற்றுத்தி றனாளிகளுக்கான அரசின் உதவிகளையும் பெற்று கொடுத்துள்ளார்.

    இதேப்போல் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் யாராவது மனு கொடுக்க வந்தால் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மனு வாங்குவார். மேலும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர துரித நடவடிக்கை எடுப்பார்.

    இப்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தொடர்ந்து உழைக்கும் கலெக்டர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அருண்தம்புராஜ் ஆகியோருக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. அவர்களின் சேவைப்பணி தொடர வாழ்த்துக்கள் என்றனர்.

    Next Story
    ×