search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோரிடம், அமைச்சர் கீதாஜீவன் நிதி உதவி வழங்கியபோது எடுத்த படம்

    விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் சிவலார்பட்டி கிராமத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • பின்னர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தில் கடந்த 12-ந் தேதி விளையாட சென்ற மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் சுதன் ஆகிய 3 பள்ளி சிறுவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ரூ. 2 லட்சம் நிதியுதவி

    இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இன்று சிவலார் பட்டி கிராமத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அவர்களது பெற்றோரிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்திற்கான காசோ லையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அவர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.

    குடியிருப்பு கட்டிடம்

    முன்னதாக விளாத்தி குளம் மற்றும் புதூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் ஒன்றிய செயலாளர் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, புதூர் நகர செயலாளர் மருதுபாண்டி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், முன்னாள் ராணுவவீரர் மாரிமுத்து, தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×