என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னிமலை அருகே உடல்நலம் பாதித்த கணவர் வேலைக்கு போக முடியாததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை,மேற்கு வெப்பிலி, அரிஜன காலானியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ராதா(வயது35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழனிசாமியும், ராதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாக பழனியால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை வாட்ட தொடங்கியது.

    இதனால் ராதா கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ராதாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தமிழர்கள் தூக்கி எறிந்தால் வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன் என்ற ரஜினியின் பேச்சு அவர் நிறைய காயப்பட்டுள்ளதை காட்டுகிறது என ஈரோட்டில் பா. ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
    ஈரோடு:

    பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை செயல்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. ஒரு நாடு, ஒரு வரி விதிப்பு, ஒரு சந்தை என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

    2003-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் இருந்த போதே இந்த திட்டம் வர வேண்டியது. ஆனால் 14 ஆண்டுகள் கழித்து தற்போது நிறைவேறி உள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள், மருத்துவ சேவை, கல்வி வசதிகள் விலை குறைவாக கிடைக்கிறது.

    ஜி.எஸ்.டி. வரி மூலம் 2-ம் நபர் வியாபாரம் இனி நடக்காது. 1.2 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர் பார்க்கிறோம்.

    மோடி அரசு ஏழை மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி மருந்தகங்கள் தற்போது நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. விரைவில் 1000 ரெயில் நிலையங்களில் இந்த மருந்தகம் தொடங்கப்பட உள்ளது.

    தமிழகம் என்றால் ஊழல் அரசியல்வாதிகள் இருப்பிடம் என கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. ப.சிதம்பரம் குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்து உள்ளனர். சி.பி.ஐ. சோதனை நடந்தது மூலம் அது நிரூபணமாகி உள்ளது.

    நண்பர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் பேசும் போது, ‘‘நான் பச்சை தமிழன். என்னை தமிழர்கள் தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன்‘‘ என்றார். இதன் மூலம் அவர் நிறைய காயப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது.

    ரஜினிகாந்த் 100 சதவீதம் பொது வாழ்க்கைக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


    அந்த அளவுக்கு சிஸ்டம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்? என்று ரஜினிகாந்த் ஆராய வேண்டும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள் தான் இதற்கு காரணம்.

    இந்தியை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்கிறது என கூறுவதில் உண்மை இல்லை. மு.க.ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ‘‘நீங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக களம் இறங்க தயாரா? அவ்வாறு நீங்கள் இறங்கினால் உங்கள் குடும்ப குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது வரும்’’.

    இந்தி திணிப்பை பற்றி பேச திராவிட இயக்கங்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் சிவ சுப்பி ரமணி, செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 62.4 மி.மீ. பதிவானது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் இடையில் சில நாட்கள் பெய்யவில்லை.

    இதனால் பகல் நேரங்களில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    இரவு 7.45 மணிக்கு மேல் இடி மின்னலுடன் 25 நிமிடத்துக்கு மேலாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் லேசான தூரலுடன் மழை நீடித்தது. இந்த மழை காரணமாக ரோடுகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம், நாச்சியப்பா வீதி, அகில் மேடு வீதி மற்றும் 46 புதூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில்மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு மட்டும் ஈரோட்டில் 43 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    ஈரோட்டைப்போல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 62.4 மி.மீட்டரும், தாளவாடியில் 61 மி.மீட்டரும், கொடிவேரியில் 50 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அம்மாபேட்டையில் நேற்று முன்தினமும் பரவலாக பெய்த மழை நேற்றும் நீடித்ததால் அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெருந்துறையில் 27 மி. மீட்டர் மழை பெய்துள்ளது. இடி மின்னலுடன் காற்றின்றி பெருந்துறை டவுன், துடுப்பதி, சீனாபுரம், காஞ்சிக் கோவில், விஜயமங்கலம், ஈங்கூர், எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையால் பெருந்துறை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

    இதேபோல பவானி, சத்தியமங்கலம், சென்னிமலை, வரட்டுபாளையம், கவுந்தபாடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
    ஈரோடு:

    கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). போர்வெல்லில் பிட்டராக வேலை பார்த்தார்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுபா (24). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். சுபா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கணவர் செல்வராஜ் கண்டித்தார். இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மனைவி மீது செல்வராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் ஈரோடு வீரப்பன்சத்திரத்துக்கு வந்து குடும்பம் நடத்தினர்.

    அங்கும் அடிக்கடி சுபா போனில் யாரிடமோ பேசி வந்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி நடத்தையில் செல்வராஜ் சந்தேகப்பட்டார்.

    இதையடுத்து தனது 2 மகன்களையும் செல்வராஜ் அழைத்து கொண்டு கோவைக்கு சென்று விட் டார். சுபா ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-8-2016 அன்று ஈரோடு வந்த செல்வராஜ் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சுபா மறுத்தார்.

    இதையொட்டி அவர்களிடையே கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மனைவியை தாக்கினார். மேலும் கழுத்தை நெரித்தார்.

    இதில் மயங்கி சரிந்த சுபாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (12.08.16) அங்கு சுபா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக செல்வராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதியும், நாகரத்தினமும் (பொறுப்பு) வாதாடினார்கள்.
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
    ஈரோடு:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலுக்கு த.மா.கா. தயாராகி வருகிறது. நான் கடந்த 2 மாதமாக 32 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன். த.மா.கா. உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? த.மா.கா.வின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை பற்றி ஆராய்ந்தேன்.

    உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டணி தொடரும். அ.தி.மு.க. கூட்டுக் குடும்பமாக இருப்பதை த.மா.கா. விரும்புகிறது.

    மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு துணை நிற்கவில்லை. விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


    அவர்கள் விவசாய கடன்களுக்காக நெருக்கப்படுகிறார்கள். எனவே அவர்களது அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதிலளித்து ஜி.கே.வாசன், ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் மக்கள் மன நிலையை நன்கு புரிந்தவர். எனவே அவர் சரியான முடிவை எடுப்பார்’’ என்றார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், இளைஞரணி தலைவர் யுவராஜா, விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு :

    எடப்பாடி கே.பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சராக ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் கசிந்தன.

    கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி படித்த கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணியம், ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

    ஆனால் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை. அந்த விழா நடந்த அதே நேரத்தில் அவர் பெருந்துறையில் வேறு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். முதல்-அமைச்சர் அரசு விழாவுக்காக வரவில்லை. தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளும்போது எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை என்று பேசினார்.

    இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அவர் அதிருப்தியில் இருப்பதை காட்டியது.

    ஆனால் இதுபற்றி வெளிப்படையாக எந்த தகவல்களும் வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கூடி தனியாக ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.



    இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. ஒருவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பு ஏற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை முதல்-அமைச்சர் எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தவில்லை. உங்கள் தொகுதியின் பிரச்சினை என்ன என்றும் கேட்கவில்லை. இது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் உடனடியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து கருத்துகள் கேட்க வேண்டும். அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்களிடம் பேசாத அவர் சில அமைச்சர்களை மட்டும் அழைத்து பேசி, ஏதாவது திட்டங்களை அறிவிக்கிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாமா? கட்சியும், ஆட்சியும் இப்போது எந்த பாதையை நோக்கி செல்கிறது என்பதே தெரியவில்லை.

    அம்மா இருந்திருந்தால் இந்த நேரம் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து இருப்பார். மக்களிடம் அதிருப்தி வராத வகையில் பொறுப்புகளை மாற்றி கொடுப்பார். அது தொண்டர்களையும், அரசு நிர்வாகத்தையும் சமநிலைப்படுத்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை இப்போது இல்லை. எங்கள் கோரிக்கை எல்லாம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி கோரிக்கையை முதல்-அமைச்சர் கேட்க வேண்டும் என்பதுதான்.

    ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. இது பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் மனதில் இருக்கும் குறையாகும். எனவே இந்த மனநிலையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விரைவில் ஒன்றிணைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சருக்கு அதிருப்தி தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் நடத்திய கூட்டம் அ.தி.மு.க.வில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடம்பூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் பூச்சு மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    டி.என்.பாளையம்:

    கடம்பூரை அடுத்த கோட்ட மாளம் குளத்து பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 24). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அது முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன் சீட்டு பணம் ரூ.2 லட்சம் எடுத்தார். அதை அவர் தவற விட்டு விட்டார் என தெரிகிறது. இதனால் ராஜேந்திரன் சில தினங்களாகவே ஒரு வித விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து வயிறு வலிக்கிறது என்று அக்கம் பக்கத்தினரிடம் தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பங்களா புதூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் பதிலாக தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.
    ஈரோடு:

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் பதிலாக தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள். ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இவர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

    வேலைக்கு வரும் டிரைவரிடம் பஸ்சை ஓட்டச் சொல்கிறார்கள். அவர்கள் சரியாக ஓட்டினால் எடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நேர ஷிப்டுக்கு ரூ. 550 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல தற்காலிக கண்டக்டர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.                                                                 
    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ஈரோடு:

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    இன்று பல்வேறு இடங்களில் பஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற் சங்கங்களின் சார்பில் அதன் தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.ஐ.டி.யூ, எஸ்.பி.எப், எச்.எம்.எஸ் உள்பட 8 சங்கங்கள் கலந்து கொண்டன. சுமார் 150பேர் பஸ்நிலையத்தில் கூடினர். அப்போது அவர்கள் மேலே சட்டை அணியாமல் அரை நிர்வாணக் கோலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேலும் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை கேட்பதுபோல் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். நெற்றியில் நாமமும் போட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் "எங்கள் பணத்தை எடுத்து செலவு செய்வது நியாயமா?'' "நிறைவேற்று நிறைவேற்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று'' போன்ற கோஷங்களை எழுப்பினர். அமைதியான முறையில் போராட்டம் செய்ததால் யாரும் கைது செய்யப் படவில்லை.

    பாதுகாப்பு பணியில் டவுன் போலீஸ் டி.எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
    பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவர் கண் எதிரே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பு.புளியம்பட்டி:

    அந்தியூர் தவிட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 30). இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது.

    சங்கர் கோவையில் லேத் பட்டறை (வொர்க் ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். நேற்று சங்கர் சொந்த ஊரான அந்தியூர் தவிட்டுப் பாளையம் வந்தார். பிறகு மாலை தன் மனைவி ரம்யாவுடன் கோவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பு.புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அரசு மறு வாழ்வு இல்லம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    இதில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரம்யாவுக்கு உடல் மற்றும் தலையில் பலத்த அடிபட்டு கணவர் கண் எதிரே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயத்துடன் துடித்த கணவர் சங்கர் சத்தியமங்கலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு புளியம்பட்டி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் பலியான ரம்யா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பரிசோதனை நடத்தப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

    திருமணமான 3 மாதத்தில் கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் மதுக்கடையை பெண்கள் அடித்து நொருக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக்கடையால் பெண்களுக்கும், மாணவ-மாணவிகளுக் கும் பாதிப்பு இருப்பதாக கூறி வந்த பெண்கள் அந்த மதுக்கடையை மூட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தொடர்ந்து அந்த மதுக்கடை அதே இடத்தில் செயல்பட்டு வந்தது. இது அந்த பகுதி மக்களை ஆத்திரப்படுத்தியது. இன்று மூடப்படும், நாளை மூடப்படும் என்று காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எனவே அவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

    இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடை முன்பு திரண்டனர். மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர். மதுக்கடை மூடி இருந்ததால் திடீரென அவர்களது ஆத்திரம் மதுக்கடை கட்டிடம் மீது பாய்ந்தது.

    கடை முன்பிருந்து ஷெட்டை அவர்கள் அடித்து உடைத்து நொருக்கினர். சிலர் அந்த பகுதியில் இருந்து சுவரை அப்படியே கீழே தள்ளி சேதப்படுத்தினர்.

    குடிமகன் உட்கார்ந்து மது குடிக்க அங்கு ஏராளமான கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் பெயர்த்து எடுத்து வீசினர். ஒரு சிலர் அந்த மதுக்கடையின் பார் பகுதிக்கு சென்றனர். அங்கு கிடந்த சேர்களை தூக்கி வீசினர். அங்கு வைக்கப்பட்டு இருந்து வாட்டர் கேனை உடைத்தனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சூளை பகுதிக்கு செல்லும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரும் அங்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பா.ம.க.வை சேர்ந்த ஆறுமுகமும் மக்களிடம் பேசினார். மக்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சென்னிமலையில் இருந்து ஈரோடு வந்த பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர்.
    சென்னிமலை:

    ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து சென்னிமலை நோக்கி அரசு பஸ் (தடம் எண் 11) வந்து கொண்டிருந்தது.

    ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடமான கவுண்டிச்சிபாளையம் பஞ்சாயத்து தொட்டிபாளையம் பிரிவு அருகே அந்த பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பஸ்சின் முன்புறம் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்துக்கு பின்னர் சென்னிமலை, வெள்ளோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    ×