search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடம்பூர்"

    • மனுவை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
    • அனைத்து ரெயில்களும் கடம்பூரில் நின்று செல்ல வழி செய்வேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

    கயத்தாறு:

    அகில இந்திய நாடார் சக்தியின் மகளிர் அணி தலைவி விஜயாசந்திரன், சென்னை வாழ் நாடார் உறவின் முறையின் தலைவர் சவுந்திர பாண்டியன், பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சசிகலா புஷ்பாவிடம் மனு கொடுத்தனர்.

    சசிகலா புஷ்பா

    அதனை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ. க. தமிழக தலைவர் அண்ணாமலையின் உதவியோடு, ரெயில்வே துறை அமைச்சர், மதுரை மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மார்ச் 30-ந்தேதிக்குள் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழி செய்வேன்.

    கடம்பூரில் இருவழி பாதை அமைக்கப்பட்டு அங்கு பயணிகள் நடந்து செல்ல வழி அமைக்காததால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகள் சங்ககூட்டம்

    அப்போது கடம்பூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தனசேகரன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வியாபாரி சங்கத் துணைத் தலைவர்கள் புஷ்ப கணேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ராதேவி, கலாராணி, செல்வ காயத்ரி, கடம்பூர் பா.ஜ.க. நகரச் செயலாளர் ராஜகோபால், துணைச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் உடனிருநதனர்.

    இதனைத் தொடர்ந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம், வியாபாரிகள் மனுக்கள் கொடுத்தனர்.

    அதனை பெற்றுக் கொண்டு அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×