search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.7.6 லட்சத்தில் சிறப்பு பூங்கா - கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்
    X

    கலெக்டர் விஷ்ணு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.7.6 லட்சத்தில் சிறப்பு பூங்கா - கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்

    • நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது
    • பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தசைகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறப்பு பூங்கா

    இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்காக ரூ.7.6 லட்சம் மதிப்பில் பழைய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்வி குழும தலைவர் புஷ்பலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×