search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக நாடுகளே போற்றும் வகையில்  தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தஞ்சை நடந்த முப்பெரும் விழா கூட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசினார்.

    உலக நாடுகளே போற்றும் வகையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • இந்தியாவின் நம்பர் 1 முதல-அமைச்சராக திகழ்ந்து வருகிறார்.
    • மத்திய அரசின் நெருக்கடியால் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடந்தது.

    இதற்கு தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், சட்ட திருத்த குழு உறுப்பினர் இறைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, உலக நாடுகள் போற்றும் வகையில் சிறப்பான முறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

    இதனால் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்.

    ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் பெரும்பாலானாவற்றை நிறைவேற்றி உள்ளார்.

    மத்திய அரசின் நெருக்கடியால் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு தான்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவால் மத்திய அரசின் உதய் திட்டம் எதிர்க்கப்பட்டது.

    ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு சிறிது காலம் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உதய் திட்டத்தில் கையெழுத்து இட்டார்.

    அதன் காரணமாகவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் தான் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு 8 ஆண்டுகளை கடந்தும் சொல்லிக் கொள்ளும் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றார்.

    இதேபோல் தலைமை கழக பேச்சாளர்கள் வரகூர் காமராஜ், கலைமணி பாரதி, தஞ்சை காமராஜ் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்லக்கண்ணு, அருளானந்தசாமி, உலகநாதன், முருகானந்தம், சிவசங்கரன், கௌதமன், முரசொலி, செல்வகுமார், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மாநகர நிர்வாகிகள், பகுதி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோட்டை பகுதி செயலாளர் மேத்தா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் செய்திருந்தார்.

    Next Story
    ×