என் மலர்
சென்னை
- 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் ஜூன் 2 -ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாட்டில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே அனைத்து பாட புத்தகங்களும் விநியோகிக்கப்படும்.
* விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன் புத்தகங்கள் வழங்கப்படும்.
* 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும்.
- தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும்.
ஊடகங்கள் இது குறித்து செய்திகள் வெளியிட்ட பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
இங்கு நடைபெற்றுள்ள சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
- நேபாள தம்பதியிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் வேலை பார்த்த நேபாள தம்பதி மாயமாகி இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மகேஷ்குமார் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை நீலாங்கரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு மாயமான நேபாளத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ், நிகிதாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்.
- அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்...
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சாலைகள், உள்கட்டமைப்பு சரியில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, தமிழிசை பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர். அங்கு தள்ளாடின்னே இருந்தவர்களை பார்த்துட்டு கவர்னராக வந்தவங்க. அதனால அவங்க எது பார்த்தாலும் தள்ளாட்டமாவே தெரிகிறது.
அன்பு சகோதரிக்கு மீடியா மேனியா. ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இந்த சாலை எப்படி தரமானதாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேளுங்கள் என்றார்.
இதனிடையே, திமுக துரோகி, காங்கிரஸ் எதிரின்னு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் வசைபாடாத ஆள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்... என் வாயால் சொல்லக்கூடாது. அவர் வசைபாடா ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்றார்.
- மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
- 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!
அயோத்திதாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:
சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!
சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
- மாணவர்களை நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருந்த சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவர் கவுதமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் கவுதம் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த முறையும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு மாணவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதற்கு மாணவன் கவுதமின் தற்கொலை எடுத்துக்காட்டு ஆகும்.
நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, கடந்த மே 4-ஆம் தேதி கயல்விழி என 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது மாணவர் கவுதம் உயிர்நீத்திருக்கிறார். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை. நீட் எந்த நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு கூறியதோ, அந்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண் எடுத்தவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால், 500க்கும் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கூட லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையை தகுதியை விட பணம் தான் தீர்மானிக்கிறது என்பது தான் நீட் தேர்வின் அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலாகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும் நீட் தேர்வு தேவையா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
இன்னொருபுறம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வசனம் பேசிய முதலமைச்சர், அதன் பின் 50 நாட்களாகப் போகும் நிலையில் சட்டப் போராட்டம் நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கையும் தொடரவில்லை.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்பது என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை என்பது ஒருபுறம்.
- தவறு நடந்துவிட்ட பிறகு அதன் கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது இன்னொருபுறம்.
சென்னை:
"உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" என்று அரக்கோண சம்பவத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஏற்கனவே துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி என்றும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஆட்சியை பொறுத்தளவில் தவறு நடக்கின்ற பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம்சாட்ட வேண்டும். தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்பது என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை என்பது ஒருபுறம். தவறு நடந்துவிட்ட பிறகு அதன் கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது இன்னொருபுறம். இன்னார், இனியவர் என்று எங்களுடைய முதலமைச்சருக்கு பாகுபாடு இல்லை.
தவறு யார் இழைத்து இருந்தாலும் சொந்தக்கட்சிக்காரர் இழைத்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் முதல்வருடைய நோக்கம், நிலைப்பாடு. அந்த வகையில், மாநகராட்சியில் 2 மாமன்ற மாநகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகளோடு சண்டையிடுவது குறித்து அவருடைய கவனத்திற்கு சென்ற உடன் பதவியில் இருந்தே நீக்கிய ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி. நீதியின் ஆட்சி. சட்டத்தின் ஆட்சி.
கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி.. அதற்கு சாட்சி சாத்தான்குளம் சம்பவமே அதற்கு ஒரு சாட்சி என்றார்.
- சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.
- இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* நீதிபதி குரியன் குழு ஆய்வு, இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடுக.
* 69% இடஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
* சமூகநீதியின் பயன் குறித்த விவரத்தை முழுமையாக வெளியிடாமல் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வு செய்வது அர்த்தமற்றது.
* சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.
* இடஒதுக்கீட்டால் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிதி ஆயோக்கின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
- டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்பட பல்வேறு நோக்கங்களுக்காக நிதி ஆயோக் அமைப்பு 2015-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜ.க. அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.
டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23-ந்தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.
- அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
- அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அயோத்திதாச பண்டிதரில் 180-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் வளாகத்தில் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோ.வி.செழியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் ஒரு சவரன் ரூ.69,760-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,710-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-05-2025- ஒரு கிராம் ரூ.109
18-05-2025- ஒரு கிராம் ரூ.108
17-05-2025- ஒரு கிராம் ரூ.108
16-05-2025- ஒரு கிராம் ரூ.108
15-05-2025- ஒரு கிராம் ரூ.108
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை (21.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, போரூரில், முத்து நகர், எம்ஆர்கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






