என் மலர்
சென்னை
- அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
இதைப் பார்த்த பைக்கை ஓட்டி வந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தூரமாக சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, வாகனத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிகழ்வால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
- கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
காலை முதல் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து ஸ்ரீகாந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீகாந்த் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- கல்வியாளர் அணியின் செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமனம்.
திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

- இபிஎஸ் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
- அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.
அ.தி.மு.க ஐ.டி.விங் சரியாக செயல்படாததால் அந்த வேலையையும் செய்ய முயற்சிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தவொரு மனிதராக இருந்தாலும், மாநிலத்திற்கு நல்லது நடந்தால் அதைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள்தான், மாநிலத்தின் சாதனைகளை பாராட்ட மனமின்றியும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும், முருகன் பெயரில் பா.ஜ.க. நடத்திய அரசியல் கூட்டத்தில் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை.
இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? தமிழ்நாடு பெரியார் மண்-அண்ணா மண் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது இங்கேயும் காவிக் கூட்டத்தின் அராஜக செயல் தாண்டவமாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்.
சமீபத்தில், தி.மு.க.வின் ஐ.டி.விங், பா.ஜ.க.வின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தது.
தி.மு.க. ஐ.டி. விங்கின் பாய்ச்சலையும், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதலமைச்சரின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2024-ல், அவர் அந்நிய நேரடி முதலீடு (FDI) எண்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போதே நானும் அவருக்கும், அவரது கற்பனைத் திறனற்ற அடிமைப் படைக்கும் அந்நிய நேரடி முதலீட்டுத் தரவு தமிழ்நாட்டின் செயல்திறனை அளவிடுவதற்கான சரியான தரவு அல்ல என்று விளக்கமளித்திருந்தேன்.
இப்போதாவது இந்த எளிய உண்மையை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் மீண்டும் கூறுகிறேன். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் பிற மாநிலங்களில் உள்ளன.
மேலும், அந்த நிதி, அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டை பல நிறுவனங்கள் முதலீடு செய்யவோ அல்லது மறுமுதலீடு செய்யவோ தேர்வு செய்திருந்தாலும், அவற்றின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் வேறு மாநிலங்களில் உள்ளன.
அந்நிய நேரடி முதலீடுகளைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. எனவேதான் பொருளாதார நிபுணர்கள் அதை மாநிலத்தின் வளர்ச்சிக்கான சரியான குறியீடாக ஏற்றுக்கொள்வதில்லை.
இத்தகைய நிலையிலும், தமிழ்நாடு இந்தியாவின் முதலீட்டில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளதுடன், தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
முதலமைச்சர் கூறியது போல, நமது நியாயமான முதலீடுகளைப் பிற மாநிலங்களுக்குத் திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. அதற்காக தன் அதிகார பலத்தைப் பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன் கண்டன அறிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும். அ.தி.மு..கவின் 2016-2021 காலகட்டத்தில் 32 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாக அவர் கூறுகிறார்.
திராவிட மாடல் அரசு தனது ஆட்சிக்காலமான இந்த 4 ஆண்டுகளில், 310 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும், 31 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அவரது கூற்றுப்படியே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை ஒப்புக்கொண்டாலும், எத்தனை
சதவீதம் முதலீடாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அவர் முதலீடாக மாற்றாமல் விட்டுச் சென்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், காழ்ப்புணர்வு காட்டாமல், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கான முதலீடுகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து செயல்படுத்தி வருகிறது மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் தலைமையிலான அரசு.
கடந்த நிதியாண்டில் 9.69% GSDP வளர்ச்சியுடன் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 6%க்கும் குறைவாக இருந்தும், இந்தியாவின் உற்பத்தி GDP-யில் 11.9% பங்களிக்கிறோம். இந்த மக்கள்தொகையைத்தான் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் நியாயமற்ற மறுவரையறை மூலம் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறது.
ஆனாலும், தனது அரசியல் எஜமானர்கள் தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து எதுவும் பேசாமல் எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருக்கிறார்.
முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், EV, ஜவுளி, தோல் மற்றும் காலணி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 2021-22-ல், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாம் வெறும் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தோம். ஆனால், கடந்த ஆண்டு 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டினோம் - வெறும் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி!
இந்திய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 21.8 விழுக்காடுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 38 விழுக்காடு ஆகும். இந்தப் பொருட்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.
மேலும், தென் தமிழ்நாடு ஒரு முக்கிய பசுமை ஆற்றல் மற்றும் ஆட்டோ மையமாக உருவெடுத்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஜாம்பவான்களான, விரைவில் திறக்கப்படவிருக்கும் Vinfast உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பெரும் முதலீடுகள் குவிந்து, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை நாம் அடைந்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் TIDEL Neo பூங்காக்களைக் கட்டி வருகிறோம். இதில் பல ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகாலத்தில் அவர்கள் வெறும் 6-7 SIPCOT பூங்காக்களை மட்டுமே நிறுவினர். இந்த அரசாங்கத்தின் கீழ், நாம் 30- க்கும் மேற்பட்ட பூங்காக்களை நிறுவியுள்ளோம், மேலும் பலவற்றை நிறுவும் பணியில் இருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே.. கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்க நீங்கள் 10 ஆண்டுகளாகத் தூங்கினீர்கள் கோயம்புத்தூருக்குத் தகுதியான விமான நிலையத்தை அளிக்க நமது முதலமைச்சர்தான் 2000 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கினார். உங்கள் எஜமானரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் கூட நமது முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்குப் பெருந்தன்மை காட்டினார்.
ஆனால், மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் நன்றியுணர்வுடன் அதைப் பாராட்டக்கூட வேண்டாம். காழ்ப்புணர்ச்சியால் அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அக்டோபர் 2024-ல் மட்டுமே அமைச்சரவையால் இறுதி ஒப்புதல் கிடைத்தது, மேலும் அதன் நிறைவுக்கான இலக்கு 2028 ஆகும். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறீர்களா?
முதலமைச்சர் அவர்கள் ஓசூர் மற்றும் ராமேஸ்வரத்தில் பெரிய விமான நிலையங்களை அறிவித்துள்ளார். இது அந்த பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை மிகப்பெரிய முதலீட்டு மையங்களாக மாற்றும். தஞ்சாவூரில் முதல் SIPCOT, தென்காசியில் முதல் SIPCOT, கன்னியாகுமரியில் முதல் TIDEL Neo ஆகியவை நமது முதலமைச்சர் உறுதி செய்த சில முதல் முயற்சிகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு அரசியலில் கவனம் பெற நினைக்கலாம். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்று, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும். மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அளித்த நேர்காணலின் தரவுகளைக் கூட சரியாகப் புரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.
பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோமாளிக் கூத்துகளால், உலகத்தில் எந்த நாடும் தமிழ்நாட்டுக்கு வரத் தயங்கியதையும், கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மேற்கொண்ட தொழில் வளர்ச்சியாலும், அதற்காக உருவாக்கிய கட்டமைப்புகளாலும் உலகின் பல நாடுகளும் தமிழ்நாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ஆர்வம் காட்டி வருவதையும் அறியாததுபோல அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். அமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாகவே அது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு விளக்கமளித்து பதிலடி கொடுத்திருப்பதால், தங்களின் அடுத்த அறிக்கையை தயாரிக்கும் நேரத்தில் அதனைக் காண வேண்டுகிறேன்.
விமர்சனங்களை வரவேற்று எதிர்கொள்கின்ற ஆற்றல் மிக்க முதலமைச்சராக நம் திராவிட நாயகன் அவர்கள் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சரியான தரவுகளுடன் முன்வைக்கட்டும். மண்டபத்தில் யாரோ சொல்வதை நம்பி, அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்!
- நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தரம், தரம் என்றார்கள்!
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!
RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 1488 ஆக இருந்தது.
- ஜூன் மாதத்தில் 2800 ஆக அதிகரித்துள்ளது.
பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து பெட்டிகளும் ஏ.சி. வசதி கொண்ட ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த ரெயிலுக்கு நாளுக்குநாள் பயணிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 1488 ஆக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 2800 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
- மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.
மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.
அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு.
கொள்கையை ஒருபோதும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்" என்றார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.
- மாநில நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தேசிய தலைமைக்கு நயினார் அனுப்பி வைத்திருந்தார்.
தேசிய தலைமையில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.
மாநில நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தேசிய தலைமைக்கு நயினார் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் நயினார் நாகேந்திரன் அனுப்பிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
- 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள், 47 உதவியாளர்கள் 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல. நிர்மல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
- சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன. இந்த பகுதியின் இருபுறமும் திரைச்சீலை அமைக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி குடிசைப்பகுதியில் திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
- தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.
- மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச மாட்டோம் என்று சொன்னதை மீறுகின்ற வகையில் அதில் உரையாற்றிய ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பகிரங்கமாக தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.
அது மட்டுமல்லாமல், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.
இது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். அரசியலையும், மதத்தையும் கலந்து தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள மக்களை பாசிச வலையில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் இரையாக மாட்டார்கள்.
தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெற்ற உரிமையை நிறைவேற்றுவதை தடுக்கிற வகையில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தமிழ்க் கடவுள் முருகன் பெயரை உச்சரிப்பதற்கு கூட தகுதியற்றவர்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை மதிக்காமல் அதற்கு தடையாக இருக்கும் இந்து மதத்தின் துரோகிகள். இவர்கள் இந்து மதத்தை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது? இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கருதாதவர்களை இந்து சமய விரோதிகள் என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது? இத்தகைய பாசிச மக்கள் விரோத பா.ஜ.க.விடமிருந்து இந்து மதத்தையும், தமிழ்க் கடவுள் முருகனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
இனிவருகிற காலங்களில் இத்தகைய முயற்சி நடைபெறுவதை முறியடிக்க சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொMadras High Court, H Raja, சென்னை ஐகோர்ட், எச் ராஜாடர முடியாது.
- விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு எச்.ராஜாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் காவல்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






