என் மலர்tooltip icon

    சென்னை

    • அதிமுக இப்போது வலுவாகவும் துடிப்பாகவும் உள்ளது.
    • மற்ற கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடுவதில்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:-

    * 2024 பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை?

    அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து தேர்தல் உத்திகள் வகுக்கப்படுகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும். எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைப்பது அவசியமாகிவிட்டது. 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை.

    * யார் வலுவான கூட்டாளி - பாஜகவா அல்லது தவெகவா?

    பாஜக ஒரு தேசியக் கட்சி. அது பல மாநிலங்களில் ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. கட்சிகளை நாம் ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்.

    * 2026 தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததா?

    திமுக அரசை வீழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை நாங்கள் வரவேற்கிறோம். அதில் என்ன தவறு?

    * பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான உங்கள் முடிவு, அண்ணாமலை அதன் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கும், ஏதாவது தொடர்பு உள்ளதா?

    மற்ற கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடுவதில்லை.

    * முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல அதிமுக தலைமைக்கு சுறுசுறுப்பு இல்லை என்ற விமர்சனத்தைப் பற்றி?

    அவர்கள் ஒப்பற்ற தலைவர்கள். அவர்களை யாருடனும் ஒப்பிடுவது முட்டாள்தனம். கட்சி அவர்களால் வளர்க்கப்பட்டது, அவர்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும். அதிமுக இப்போது வலுவாகவும் துடிப்பாகவும் உள்ளது. கட்சியினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

    * சட்டம் ஒழுங்கு குறித்து கருத்து தெரிவிக்க அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியுடன் முதலமைச்சராகி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஸ்டாலினை விட, மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவுக்கு அதிக உரிமை உண்டு. திறமையற்ற திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மவுனமாக இருப்பதற்கு நாம் கூட்டாளிகளா?

    ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் யாரையும் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அந்த உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. இதுதான் ஜனநாயகம் பற்றிய ஸ்டாலினின் புரிதல்.

    • சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
    • குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும். காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.

    தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் மதுபானமே.

    சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன. எனவே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
    • அ.தி.மு.க. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.

    மேலும், அ.தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும் அ.தி.மு.க. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

    த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எடப்பாடி பழனிசாமி தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று கூறினார்.

    விஜய் கூட்டணிக்கு வந்தால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துவிட்டு த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார். 

    • நேற்று தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கும் விற்பனையானது.
    • நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. கடந்த 9-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை விலை உயர்ந்து வந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்க ரூ.72,840-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160

    14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-07-2025- ஒரு கிராம் ரூ.124

    16-07-2025- ஒரு கிராம் ரூ.124

    15-07-2025- ஒரு கிராம் ரூ.125

    14-07-2025- ஒரு கிராம் ரூ.127

    13-07-2025- ஒரு கிராம் ரூ.125

    • தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
    • தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!

    ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

    தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.

    அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் #TamilNaduDay!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.
    • மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி முதல் செப்டம்பர் 12-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது.

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.

    மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணையதளம் வாயிலான வீரர், வீராங்கனைகளின் இந்த முன்பதிவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ராஜ ராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    போரூர்: அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, காவலஞ்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்காடு,

    திருமுடிவாக்கம்: குன்றத்தூர், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை , திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர், வழுதாளம்பேடு.

    திருமுல்லைவாயல்: போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர்.

    பெருங்குடி: அறிஞர் அண்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், கெனால் ரோடு, ஜெயின் காலேஜ் ரோடு.

    வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகன்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.

    • வந்தேபாரத் விரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் இருப்பது தெரிவிக்கப்படும்.
    • புதிய நடப்பு முன்பதிவு வசதியானது குறிப்பிட்ட 8 வந்தே பாரத் விரைவு ரெயில்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்தவகையில், குறிப்பிட்ட சில வந்தேபாரத் ரெயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வந்தேபாரத் விரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் இருப்பது தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய நடப்பு முன்பதிவு வசதியானது குறிப்பிட்ட 8 வந்தே பாரத் விரைவு ரெயில்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, மங்களூரு சென்டிரல்- திருவனந்தபுரம் சென்டிரல் (வண்டி எண். 20631), திருவனந்தபுரம் சென்டிரல்-மங்களூரு சென்டிரல் (20632), சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (20627), நாகர்கோவில்- சென்னை எழும்பூர் (206628) கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்டிரல்- மட்காவ் (20646), மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்டிரல்-விஜயவாடா (20677) ஆகிய 8 வந்தே பாரத் ரெயில்களிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
    • கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தொழிற்சாலை, குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகள் ஏற்ற, இறக்குவதற்காக நிறுத்தவும், ரெயிலை பாதை மாற்றுவதற்கும் ஒரு மணி நேர அடிப்படையில் என்ஜினுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடம் ரெயில்வே துறை வசூலித்து வருகிறது.

    இந்த கட்டணத்தை அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் உயர்த்த உள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ரெயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கு கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்படி அந்த கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. சரக்கு ரெயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வுக்கு என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது என்றும், எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு இதில் அடங்கும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே கடந்த 1-ந்தேதி முதல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், சரக்கு ரெயில் சேவையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு.
    • வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது.

    மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது.

    அதன்படி ஒரு இடத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது!
    • காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!

    கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!

    உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி

    அவர்கள், "காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்" என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.

    ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.

    இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?

    ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×