என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயுடன் கூட்டணியா?... தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ். பளிச்
- தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
- அ.தி.மு.க. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.
மேலும், அ.தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும் அ.தி.மு.க. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எடப்பாடி பழனிசாமி தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று கூறினார்.
விஜய் கூட்டணிக்கு வந்தால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துவிட்டு த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.






