search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat trains"

    • இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
    • சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிஎஸ்எம்டி- ஷீரடி சாய்நகர் வந்தே பாரத் ரெயில் தானே ஸ்டேஷனுக்கு காலை 6:49 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும். கல்யாண் ஸ்டேஷனுக்கு காலை 7:11 மணிக்கு நின்று, 7:13 மணிக்கு புறப்படும்.

    ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும். கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும்.

    சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.

    தானே மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த அரை-அதிவேக ரெயில்களில் ஏற தாதர் அல்லது சிஎஸ்எம்டிக்கு செல்ல வேண்டியிருப்பதால், இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். போபால் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவா- மும்பை, பாட்னா- ராஞ்சி, போபால்- இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

    இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாஜக பூத் ஊழியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

    • வந்தே பாரத் ரெயில் தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் சேர்கார் வசதியுடன் அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். எனப்படும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா இடையே இயக்கப்படுகிறது.

    இதேபோல் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

    தற்போது 7-வது வந்தே பாரத் ரெயில் தயாரிக்கும் பணியை சென்னை ஐ.சி.எப். தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தலா 16 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.

    வந்தே பாரத் ரெயில் தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனாலும் இந்த ரெயிலில் சேர்கார் வசதியுடன் அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன.

    தற்போது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் செல்லும் வந்தேபாரத் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

    வந்தே பாரத் ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 4, ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறுகிறது. ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 61 படுக்கைகளும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 48 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 24 படுக்கைகளும் இடம்பெறுகிறது. இந்த பெட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் உதவியாளருக்கு படுக்கையுடன் ஒரு இடம் ஒதுக்கப்படும்.

    தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரெயில்வே துறை டெண்டர் அழைப்பு விடுக்கிறது.

    தூங்கும் வசதியுடன் மொத்தம் 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரெயில்கள் சென்னை ஐ.சி.எப். மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலை ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட உள்ளன.

    இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2023 ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி - வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம் தமிழில் நலம் விசாரித்த அவர், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலில் ஏறி பார்வையிட்டார்.

    அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரெயில்களை நாடு முழுதும் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

    ×