என் மலர்tooltip icon

    சென்னை

    • கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும்.

    முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செப்டம்பர் 28ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை.
    • இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்" என்றார்.

    • 2013ஆம் ஆண்டு ஐ.ஓ.பி. வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு.
    • சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.

    2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளது.

    சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

    • மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணா பல்கலையில் 2-ம் ஆண்டு B.E.லெதர் டெக்னாலஜி படித்து வரும் சபரீசன் (19) என்ற மாணவர் இன்று காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
    • மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * 27-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

    * தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

    * சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    • இதய துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.
    • இதய சிகிச்சை மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

    முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதன்பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளைமறுநாள் அவர் வீடு திரும்புகிறார் என்று தெரிவித்தார். 

    • பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
    • தி.மு.க. மீதான மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் போட்டுள்ள வழக்குகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டு கொள்வார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26-ந்தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் இரவு திருச்சி செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். 27-ந்தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அவர் திருச்சியில் 26-ந்தேதி இரவு அல்லது 27-ந்தேதி காலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. தற்போது மீண்டும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில்தான் நடந்தது.

    3-வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார். அதாவது 26-ந்தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது. ஆனால் அதில் காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

    இருப்பினும் பிரதமர் மோடியை சந்திக்கத்தான் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அமித்ஷா, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த கருத்து மோதல், 2 கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் பேசுவார் என்று தெரிகிறது. அதேபோல தி.மு.க. மீதான மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் போட்டுள்ள வழக்குகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டு கொள்வார் என்று கூறப்படுகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
    • முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

    இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் நலமுடன் உள்ளார். இதயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பர் என்றார். 



    • நேற்று கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560 என்ற உச்சத்தை தொட்டு இருந்தது.

    அதன்பிறகு விலை குறையத் தொடங்கியது. அம்மாத இறுதியில் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருந்தது. இதனையடுத்து இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

    அந்த வரிசையில் கடந்த 17-ந்தேதியில் இருந்து அதாவது ஒரு வாரமாக அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. நேற்றும் விலை எகிறியுள்ளது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவர ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்து, இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255-க்கும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040

    22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280

    21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-07-2025- ஒரு கிராம் ரூ.129

    22-07-2025- ஒரு கிராம் ரூ.128

    21-07-2025- ஒரு கிராம் ரூ.126

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.

    மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன் என்றார். 



    • அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    • அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் ‘உரிமை மீட்பு பயணம்’ மேற்கொள்ள உள்ளார்.

    பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இதனிடையே, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் 'உரிமை மீட்பு பயணம்' மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டி.ஜி.பி.யிடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.

    மேலும் கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி நடக்கும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    ×