என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
- வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
- மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நாளை மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* 27-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.






