என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை - அமைச்சர் துரைமுருகன்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
- முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் நலமுடன் உள்ளார். இதயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பர் என்றார்.







