என் மலர்
சென்னை
- சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
- மந்தைவெளியில் எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் சினிமாவின் "ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை வசித்து வந்தார்.
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற வேண்டும் என்று நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதேபோன்று சென்னை மந்தைவெளி 2-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.
- மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளர் ஆவார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர். அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மருது அழகுராஜூக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.
- நேற்றுமுன்தினம் சவரனுக்கு 320 ரூபாயும், நேற்று சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனையானது.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் சவரனுக்கு 320 ரூபாயும், நேற்று சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,550-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 153 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800
23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440
21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
24-09-2025- ஒரு கிராம் ரூ.150
23-09-2025- ஒரு கிராம் ரூ.150
22-09-2025- ஒரு கிராம் ரூ.148
21-09-2025- ஒரு கிராம் ரூ.145
- தெலுங்கானாவில் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.
- கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி.
தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.
புதுமைபென், நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற எங்கள் முதன்மைத் திட்டங்களைப் பாராட்டுவதன் மூலம், கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
சென்னை:
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. அதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
அதே நேரத்தில் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். ஏற்கனவே அதற்கு 12 சதவீத வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ரூ.2,500-க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும்போது ரூ.2,500-க்கு மேல் பில் வந்தால் பிரித்து, பிரித்து பில் போட சொல்கின்றனர். அதாவது ரூ.2,500 விலை வருவதால் ஜி.எஸ்.டி.யை குறைக்க இதுபோல் செய்கின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கு எல்லோரும் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரு ஆடையின் விலை மட்டும் ரூ.2,500 மேல் இருந்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம். மற்றப்படி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்றனர்.
அதே போலபஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்று ரூ.2,500-க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் தான் வரி.
- என்னுடைய அப்பா கிடைத்த படிப்பை படித்து ஒரு டிகிரி வாங்கினார்.
- அவரது மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என 2 டிகிரி படிக்க வைத்தார்.
சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டுப் போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது.
உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரெயில் மூலம் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற, கை நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லாருடைய முன்பு கவுரவமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பதுதான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் நிறைய சாதனையாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.
- கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் தேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.
அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டை பார்த்து பெருமைப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு ஓரே மாதிரியான சமூக நீதி சிந்தனை உள்ளது. கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கை தெலங்கானாவில் உள்ளவர்களை மிகவும் ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது.
- மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம். 1000 ஆண்டுகளாக சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்டது. சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி இன்று வேகமாக நடைபோடுகிறது.
மாணவர்கள் படித்து முன்னேறும்போது அவர்களுடைய குடும்பமும் முன்னேறுகிறது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்.
கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்வதற்காக தான் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே நம்முடைய இலக்கு. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது. உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.
இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
- தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.






