என் மலர்
நீங்கள் தேடியது "திமுக எம்பிக்கள் கூட்டம்"
- தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள்.
- நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
* எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக கவர்னர்களை நியமித்து, பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட "அரசு நடவடிக்கைகளாக" ஆக்கிக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, "ஒன்றிய-மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில்-உறவில்" ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
* புதிய ரெயில் திட்டங்களும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரெயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது.
* தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.
மேலும், இந்த மெட்ரோ ரெயில் திட்டங்கள் வருவதற்கு அ.தி.மு.க. துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், "கைக்குட்டையும் கையுமாகச் சென்று" பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வேண்டும்.
* கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன் வடிவுக்குக் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது.
* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
* கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ. 3548.22 கோடி சமக்ர சிக்சா நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
* தொழிலாளர்களின் உரிமைகளை-அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் "நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை" கொண்டு வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிலாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கியுள்ள தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள்ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக்காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
* கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.
- பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக SIR பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக SSA வழியாக வரவேண்டிய அந்த நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருக்கிறோம்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக ஒரு குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அந்த பிரச்சனையையும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதையும் எழுப்ப இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய, நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
SIR என்பது அடித்தட்டு மக்கள், BLO-க்கள் மீது அக்கறையின்றி, மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.
பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு மிக குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகத்தான் இந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு இங்கு SIR பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.
மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
- தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
- வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
- திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
- கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செப்டம்பர் 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
- நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.
சென்னை:
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற, மேல்-சபை எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளில்-தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க "கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை" துவக்கி வைத்து-ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய-தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன்றியை-பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும்.
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல்-இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரெயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதலமைச்சர், பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.
பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும்-ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.
பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி-"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை" பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மறைந்த முதலமைச்சர் கலைஞர், இன்று அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் மசோதாவை நிறைவேற்றக்கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட்டத்தில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கே முன்னோடியாக சமூக நீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், "மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்", "அரசு துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்", "தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்", "பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள கிரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்", "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளோடு "இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்" மசோதாவையும் இந்த சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட "விஸ்வகர்மா யோஜானா" திட்டம், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்லவிடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.
எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, தற்போது "இந்தியா" கூட்டணிக்கு அஞ்சி "பாரத்" என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்-முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, பாராளுமன்றத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
- யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
- அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேல்-சபையில் 3-ல் 2 பங்கு ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்பதால் மசோதாவை அங்கேயே தோற்கடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
- திமுக எம்பிக்கள் கூட்டம் குறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 22-11-2024 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள்.
எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.
நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான்.
எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கழகத்தில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.
கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக - உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
- மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
கூட்டத்தில், மத்திய அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதால் கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற திங்கட்கிழமை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.






